Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே முதல் 100 சிறந்த நகரங்களில் இந்தியா டாப் ஸ்பாட்! பெங்களூரு பெரிய சர்ப்ரைஸ்.. மும்பை சாதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் சிறந்த நகரங்கள் எது? என்று ரெசோனன்ஸ் கன்சல்டன்சி (Resonance Consultancy) என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.. இந்த 2026ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் லண்டன் நகரம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது... கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து லண்டன் இந்தப் பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் அனைத்து வகையான கட்டமைப்புகளுடன் சிறந்து விளங்கும் இடங்களின் பட்டியலை, உலக அளவில் சுற்றுலா, ரியல்எஸ்டேட் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் நிலை குறித்து ஆராயும் சர்வதேச நிறுவனம் ஒன்று கடந்த 2023-ல் தரவரிசைப்படுத்தியிருந்தது.

Bengaluru Mumbai India

உலகின் சிறந்த நாடுகள்

அதாவது, வாழ்வதற்கு ஏற்ற அனைத்துவிதமான கட்டமைப்புகள், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்கள், வேலைவாய்ப்பு, முதலீடு போன்ற பல்வேறு அளவுகளில் நகரங்களின் செயல்திறனை பகுப்பாய்வு செய்து அந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதற்காகவே கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.. இறுதியில், 1 கோடியே 10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் 2023ம் ஆண்டில் முதல் சிறந்த நகரமாக அறிவிக்கப்பட்டது..

அந்தவகையில், கனடாவை சேர்ந்த ரெசோனன்ஸ் கன்சல்டன்சி என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் வருடந்தோறும் உலகின் பல்வேறு நகரங்களை ஆய்வு செய்து தலைசிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

முதலிடத்தில் லண்டன்

இந்த வருடமும் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.. இதற்காக உலகம் முழுவதும் 270 நகரங்களில் ரெசோனன்ஸ் ஆய்வை மேற்கொண்டது.. அப்போது நகரங்களின் கல்வி கட்டமைப்பு, கலாச்சாரம், சுகாதார கட்டமைப்பு, போக்குவரத்து, இரவு வாழ்க்கை, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த ஆய்வில் மேற்கொள்ளப்பட்டன..

இறுதியில் உலகின் தலைச்சிறந்த 100 நகரங்களின் பட்டியலை ரெசோனன்ஸ் கன்சல்டன்சி தற்போது வெளியிட்டுள்ளது.. இந்த லிஸ்ட்டிலும் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 11 வருடங்களாக தொடர்ந்து லண்டன் இந்தப் பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அடுத்ததாக, அமெரிக்காவின் நியூயார்க் 2-வது இடத்தையும், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 3-வது இடத்தையும் பிடித்தன.

டாப் 10ல் 2 ஆசிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.. டோக்கியோ 4வது இடத்தையும் சிங்கப்பூர் 6வது இடத்தையும் பிடித்துள்ளன.. இந்த 2 நகரங்களும் அவற்றின் தொழில்நுட்பம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட நகர்ப்புற அமைப்புகளுக்கு உலகளவில் புகழ்பெற்றவையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன..

பெங்களூர், மும்பை சபாஷ்

இந்த லிஸ்ட்டில் நம்ம பெங்களூரு 29வது இடத்தை பிடித்துள்ளது.. மும்பை 40வது இடத்தையும், டெல்லி 54வது இடத்தையும், ஹைதராபாத் 82வது இடத்தையும் பெற்றுள்ளன..

இவைகளை தவிர, இந்தியாவின் வேறு எந்த நகரங்களும் அந்த லிஸ்ட்டில் இடம்பெற்றதலைநகரம்" என்று அழைக்கப்படும் பெங்களூர், 100 நகரங்களில் 29வது இடத்தை பெற்றுள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை இந்தியர்களிடம் தந்து வருகிறது.

கடந்த வருடம் டாப்பில் பாரிஸ்

கடந்த வருடம் ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற தர ஆய்வுகள் நடத்தும் நிறுவனத்தின் சார்பில் சர்வே எடுக்கப்பட்டது.. அதில், 4வது ஆண்டாக பாரிஸ் முதலிடத்தை பிடித்திருந்தது.. இதற்கு காரணம், ஒலிம்பிக் விளையாட்டு.. எனினும் இந்தியாவின் "சிலிக்கான் வேலி" மற்றும் "தகவல் தொழில்நுட்பத் சுற்றுலாவிற்கு வழங்கப்படும் அதிக சலுகைகள் காரணமாக, பாரிஸிற்கு இந்த ஆண்டில் மட்டும்.79.3 கோடி பேர் வந்து சென்றிருந்தனர்.

அந்த100 இடங்களில் தலைநகர் டெல்லி 74வது இடத்தில் இருந்தது.. வேறு எந்த இந்திய நகரங்களும் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+