அமெரிக்காவிலிருந்து எல்பிஜி கேஸ்! இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்தம்! இதெல்லாம் வேலைக்கு ஆகுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவிலிருந்து திரவ பெட்ரோலிய எரிவாயுவை இறக்குமதி செய்ய முதன்முறையாக ஓராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதனை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருக்கிறார்.

அமெரிக்காவின் வரி விவகாரம் இந்தியாவுக்கு தலைவலியாக இருக்கிறது. இதனை சமாளிக்கவும், இந்தியா மீதான வரியை குறைக்கவும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த எல்பிஜி கேஸ் ஒப்பந்தம் இந்தியா மீதான வரியை குறைக்க உதவலாம் என்று சொல்லப்படுகிறது.

India US LPG

அமெரிக்காவுடன் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம், "இந்தியாவின் நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், எரிபொருள் தேவைக்கு ஒரே ஒரு நாட்டை மட்டும் சார்ந்திருப்பதை தவிர்க்கவும்" என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மேலும் ஹர்தீப் சிங் கூறியிருப்பதாவது, "இந்த வர்த்தக ஒப்பந்தம், வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் LPG சந்தைகளில் ஒன்று அமெரிக்காவுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான, மலிவான LPG விநியோகத்தை வழங்குவதற்காக, நாங்கள் எங்கள் LPG விநியோக சங்கிலியை விரிவுப்படுத்தியிருக்கிறோம். இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சுமார் 2.2 மில்லியன் மெட்ரிக் டன் LPG இறக்குமதிக்கான 1 ஆண்டு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் போட்டு முடித்திருக்கின்றன. 2.2 மில்லியன் மெட்ரிக் டன் என்பது இந்தியாவின் ஓராண்டுக்கான மொத்த எல்பிஜி கேஸ் தேவையில் சுமார் 10% ஆகும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கின்றன.

இந்தியா இதற்கு முன்னர் அரபு நாடுகளிலிருந்துதான் அதிக அளவு எல்பிஜியை இறக்குமதி செய்து வந்தது.

ஐக்கிய அரபு அமீரகம்
கத்தார்
சவுதி அரேபியா
குவைத்
ஓமன்
ஈராக்

ஆகிய நாடுகளிலிருந்து எல்பிஜியை இறக்குமதி செய்து வருகிறோம். இந்த நாடுகள் நமக்கு பக்கத்து நாடுகள். எனவே அங்கிருந்து எல்பிஜியை இந்தியாவுக்கு கொண்டுவரும் செலவுகள் குறைவு. ஆனால் அமெரிக்காவிலிருந்து கேஸை கொண்டுவருவது எனில் இதற்கான செலவு அதிகமாகும். அமெரிக்காவிலிருந்து வரும் கேஸ், அட்லாண்டிக் அல்லது பசிபிக் கடலைக் கடந்து இந்தியாவுக்கு வந்து சேர வேண்டும். இதனால் இந்தியாவில் எல்பிஜி கேஸ் விலை அதிகரிக்குமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

மறுபுறம், இந்தியா மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரி இந்த ஒப்பந்தம் மூலம் குறையலாம். அப்படி நடந்தால் இந்திய வர்த்தகர்கள் பலன் பெறுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+