முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட.. பிரலே ஏவுகணை சோதனை வெற்றி.. சிறப்பம்சம் என்ன?
டெல்லி: முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள குறுகிய தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரலே என்ற ஏவுகணை சோதனையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாகப் பரிசோதனை செய்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஏவுகணை 150 முதல் 500 கிமீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. 500 முதல் 1,000 கிலோ வரையிலான எரிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, மொபைல் லாஞ்சரில் இருந்து ஏவ முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பிரலே' என்ற இந்த ஏவுகணை surface-to-surface வகை பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். மேலும், தாக்க வரும் ஏவுகணைகளை இடை மறித்துத் தாக்கி தாக்கி அழிக்கும் வகையிலும் இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர நடுவானில் குறிப்பிட்ட தூரத்தை எட்டியவுடன், தனது பாதையை மாற்றியமைக்கும் திறனையும் இந்த ஏவுகணை கொண்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை அருகே புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றிபெற்றதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications