ஈரானுக்கு வார்னிங் கொடுத்த இந்தியா.. டெல்லியில் தூதரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை நேற்று திறந்த ஈரான் இன்று மூடியது. அதுமட்டுமின்றி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. அந்த வகையில் நம் நாட்டின் 2 கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் கோபமான மத்திய அரசு இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலியை நேரில் அழைத்து சம்மன் வழங்கி வார்னிங் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர், இஸ்ரேல் - லெபனான் இடையேயான மோதல் உள்ளிட்டவை அடுத்தடுத்து முடிவுக்கு வந்தன. இதையடுத்து ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக அறிவித்தது. நேற்று முதல் ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் திறக்கப்பட்டது.

india-summons-iran-envoy-mohammad-fathali-after-2-indian-vessels-firing-in-strait-of-hormuz

ஆனால் திடீரென்று ஈரான் இந்த ஜலசந்தியை இன்று மூடியது. ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி உள்ளது. இந்த கப்பல்கள் பிற நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. போர்க்கப்பல்களை அங்கிருந்து திரும்ப பெற கூறியது. ஆனால் அமெரிக்கா கேட்கவில்லை. இதனால் கோபமான ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மீண்டும் மூடுவதாக அறிவித்தது.

2 இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்

அதுமட்டுமின்றி, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் பிற வணிகக் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய அனுமதியில்லை. மீறினால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தெரிவித்தது. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்து வைத்திருப்பதாக நினைத்து பல கப்பல்கள் அதனை கடந்தன. அப்போது ஈரான் நாட்டில் செயல்பட்டு வரும் ஈரானிய புரட்சிகர காவல் படையினர் இன்று பல வணிக கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இந்தியாவின் கொடியுடன் பயணித்த 2 கப்பல்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தூதரை அழைத்து அதிருப்தி

இந்நிலையில் தான் ஈரானுக்கு, இந்தியா வார்னிங் கொடுத்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலியை இன்று மத்திய அரசு நேரில் அழைத்து சம்மன் வழங்கி சம்பவம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இந்தியாவின் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி கடும் கவலையை இந்தியா பகிர்ந்து கொண்டுள்ளது. ஈரானின் தற்போதைய துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்திய கப்பல்களை குறிவைப்பதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ஈரான் தூதரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஈரான் - இந்தியா உறவு

நம் நாடும், ஈரானும் நல்ல நட்பில் உள்ளன. போர் தொடங்கி ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடினாலும் கூட நம் நாட்டின் கப்பல்களை அவ்வப்போது அனுமதித்து வந்தது. ஆனால் இன்று திடீரென்று 2 இந்திய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. மேலும் நம் நாட்டுக்கு வர வேண்டிய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி அருகே கடலில் தவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் ஈரான் தூதர் முகமது ஃபதாலிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+