உடனே லிஸ்டை அனுப்புங்க.. உத்தரவிட்ட டெல்லி.. பாகிஸ்தானின் அடிமடியில் கைவைத்த இந்தியா.. ட்விஸ்ட்
டெல்லி: பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் பட்டியலைத் அளிக்குமாறு மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.
ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத் துறை (DoP) இந்த லிஸ்டை கேட்டு உள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பிரிவான Pharmexcil நிறுவனத்திடமிருந்து விவரங்களைக் கோரியுள்ளது.

அவசரமாக வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தகவலை DoP கோரியுள்ளது. தரவுகளின்படி, இந்தியாவின் மருந்து ஏற்றுமதி சந்தையில் 219 நாடுகளில் பாகிஸ்தான் 38வது இடத்தில் உள்ளது. 2023 நிதியாண்டில், இந்தியா $191.36 மில்லியனை ஏற்றுமதி செய்தது, அதைத் தொடர்ந்து 2024 நிதியாண்டில் $176.54 மில்லியனை ஏற்றுமதி செய்தது. சமீபத்திய தரவுகளின்படி மருந்து ஏற்றுமதி வர்த்தகம் சுமார் $200 மில்லியனாக உள்ளது.
துபாய் வழியாக சமயங்களில் பாகிஸ்தானுக்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யும். இந்தியா மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யும். அதை பாகிஸ்தான் துபாயில் இருந்து இறக்குமதி செய்கிறது. இதற்கான லிஸ்டையும் மத்திய அரசு கேட்டு உள்ளது.
மருத்துவ துறை
பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பல துறைகள் கடுமையான விளைவுகளை, சரிவுகளை சந்திக்க தொடங்கி உள்ளன. முக்கியமாக அங்கே மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் இதனால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர். பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) அங்கே கடும் பரபரப்பில் உள்ளது. பாகிஸ்தானின் மருந்து விற்பனையில் 40 சதவிகிதம் வரை இந்தியாவில் இருந்து நேரடியாகவும்.. இந்தியாவில் உருவாக்கப்பட்டு வேறு நாடுகள் வழியாகவும் பாகிஸ்தானுக்கு செல்கிறது.
இப்போது பாகிஸ்தான் உடன் வர்த்தகத்தை மொத்தமாக இந்தியா கைவிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் மருத்துவ துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது, பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருட்களில் 30% முதல் 40% வரை இந்தியாவை நம்பியுள்ளது, இதில் செயலில் உள்ள மருந்து பொருட்கள் (API) மற்றும் பல்வேறு மேம்பட்ட சிகிச்சை பொருட்கள் அடங்கும்.. இதெல்லாம் பாகிஸ்தானுக்கு கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் அதன் மருந்து மூலப்பொருளில் 30%-40% இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது. மிக முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகள், உயிரியல் தயாரிப்புகள், தடுப்பூசிகள் மற்றும் செரா, குறிப்பாக ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசி மற்றும் பாம்பு விஷத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் மருத்துவ துறையின் ப்யூஸை பிடுங்கி உள்ளது இந்தியா. மருந்துகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு உள்ளதால் மருத்துவ அவசரநிலை பிறப்பிக்கும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
நிர்வாக ரீதியாக அட்டாக்
ஏற்றுமதி மட்டுமன்றி இயற்கை வளங்கள் ரீதியாகவும் பாகிஸ்தானை இந்தியா அட்டாக் செய்து வருகிறது. உதாரணமாக 1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும். சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.
இனி நிர்வாக ரீதியாக அட்டாக் செய்ய இந்தியா தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது பாகிஸ்தான் அரசியலில் மறைமுகமாக ஆட்டத்தை ஏற்படுத்துவது. அங்கே அரசியல் நிலையற்ற தன்மையை உளவாளிகள் மூலம் ஏற்படுத்துவது. ஏன் அரசையே கூட கவிழ்ப்பது. இது இந்தியாவிற்கு கைவந்த கலை. இதனால் இந்தியா விரைவில் அது போன்ற தாக்குதல்களையும் கூட தொடங்கும்.












Click it and Unblock the Notifications