சீனாவுடன் சேர்ந்து ஓவர் ஆட்டம்! வங்கதேசத்தின் அடிமடியில் கைவைத்த இந்தியா! சரியான ஆப்புதான்
டெல்லி: இந்தியா வழியாக மூன்றாவது நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த வங்கதேசத்திற்கு செக் வைக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் நெருக்கம் காட்டிய நிலையில், இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டம் கண்டு இருக்கும் வங்கதேசத்திற்கு பெரும் சிக்கலாக இது அமையக்கூடும்.
இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடாக இருப்பது வங்கதேசம். அந்த நாட்டின் நிலப்பரப்பு எல்லைகள் பெரும்பாலானாவை இந்திய மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கின்றன. ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த வங்கதேசம், சமீப காலமாக இந்தியாவுடன் மோதல் போக்குடன் நடந்து கொள்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் புரட்சி காரணமாக அந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அனுமதியை ரத்து செய்த மத்திய அரசு
மாணவர் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதால் வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருக்கிறார். ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேச அரசின் இடைக்கால தலைவர் முகம்மது யூனுஸ் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் செவிசாய்க்கவில்லை. தற்போது இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில், சீனாவுடன் அதீத நெருக்கம் காட்ட தொடங்கியிருக்கிறது வங்கதேசம்.
அது மட்டும் இன்றி பாகிஸ்தானுடனும் உறவை புதுப்பித்து வருகிறது. வங்கதேசத்தின் ஆட்டத்திற்கு செக் வைக்கும் வகையில் அதிரடி முடிவு ஒன்றினை இந்தியா எடுத்துள்ளது. அதாவது, வங்கதேச பொருள்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவால் வங்கதேசத்திற்கு பெரிய அடி விழுந்துள்ளது..
கூடுதல் கால விரயம் ஏற்படும்
அதாவது, வங்கதேசத்தின் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை இந்தியாவின் இந்த முடிவு ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்தியாவை எல்லைகளை கொண்டுள்ள வங்கதேசத்தின் ஏற்றுமதிச் செலவு, பிற நாடுகளுக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் காலமும் அதிகரிக்கும். கடல் வழியாக வாணிபம் செய்யும் போது கூடுதல் கால விரயம் ஏற்படும் என்பதால் வங்கதேசத்திற்கு பெரும் அதிர்ச்சியை இந்தியாவின் முடிவு கொடுத்துள்ளது.
வங்கதேசம் ஜவுளி, ஆயத்ததுறையில் முன்னணி வகிக்கிறது. சிறிய நாடாக இருந்தாலும், ஜவுளி துறை ஏற்றுமதியில் இந்தியாவுடன் போட்டியிடுகிறது. அந்த நாடு இந்தியாவுடன் நல்லுறவை பேணாததால், இந்தியா வழியாக வங்கதேசத்தின் ஏற்றுமதியை அனுமதிக்க கூடாது என்று இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறி வந்தனர். இது தொடபாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில்தான், இந்தியா இந்த தடையை விதித்து இருக்கிறது.
ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி
வங்கதேசத்தில் இருந்து ரெடிமேட் எனப்படும் ஆயத்த ஆடைகள், ஜவுளி உள்ளிட்டவை இந்தியாவுக்கு சாலை வழியாக கொண்டு வரப்பட்டு, பூடான், நேபாளம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2020 முதல், இதற்கான அனுமதியை இந்தியா வழங்கி வந்தது. இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதால் செலவு குறைவு என்பதால் வங்கதேசத்திற்கு இது பெரும் பயனை அளித்தது. இந்த நிலையில், தான் இந்தியாவின் இந்த முடிவு வங்கதேசத்திற்கு பெரும் அடியாக அமைந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications