பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பை நொறுக்கி உள்ளே புகுந்தோம்! சோபியா குரேஷி சொன்ன சூப்பர் தகவல்
டெல்லி: நேற்று நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்த நிலையில், பதிலுக்கு பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதலை இந்தியா முறியடித்திருக்கிறது. இந்த பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு ஒன்று நொறுக்கப்பட்டிருக்கிறது என்று ஆபரேஷனுக்கு தலைமையேற்றிருந்த லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி கூறியிருக்கிறார்.
பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கவே ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், "இந்தியா நடத்திய தாக்குதல்கள் மிகவும் திட்டமிடப்பட்டது. குறிப்பாக இது அந்நாட்டின் ராணுவ தளங்களை குறி வைத்து நடத்தப்படவில்லை. ஆனால் 7ம் தேதி இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை அந்நாட்டு ராணுவம் நம் நாட்டின் ராணுவ தளங்களை குறி வைத்தது.
குறிப்பா வட மற்றும் மேற்கு பகுதிகளான அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பாதான்கோட், அமிர்தசரஸ், கபூர்த்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிந்தா, சண்டிகர், நால், பலோடி, உத்தர்லை, பூஜ் ஆகியவை பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் நம்முடைய வான் பாதுகாப்பு அம்சத்தால் வெற்றிகரமாக தடுக்கப்பட்டிருக்கிறது. நாம் இடைமறித்து அழித்த ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின் பாகங்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டிருக்கின்றன.
தவிர, ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா, உரி, பூஞ்ச், மெந்தர் மற்றும் ராஜூரி, குப்ராவா போன்ற பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதலை அதிகரித்திருக்கிறது. துப்பாக்கிச்சூடு, ஷெல் தாக்குதலை அதிகரித்திருக்கிறது. மூன்று பெண்கள் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் தாக்குதலை நிறுத்தும் நோக்கத்துடன்தான் நாங்கள் பதிலடி கொடுத்திருக்கிறோம். இதில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை அழித்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
இதனையடுத்து பேசிய விக்ரம் மிஸ்ரா, "பஹல்காம் தாக்குதல் பற்றி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்துக்கொண்டிருந்த நேரம், தாக்குதலுக்கு பொறுப்பேற்ற 'தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்' எனும் தீவிரவாத அமைப்பின் பங்களிப்பை பாகிஸ்தான் மறுக்க முயன்றுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் இரண்டு முறை பஹல்காம் தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பு ஏற்றிருந்தது.
இந்தியாவின் பதிலடி தாக்குதல் பற்றி விவரித்திருந்த சோபியா குரேஷி, வியோமிகா சிங் ஆகியோர் இந்தியாவின் தாக்குதல் மோதலை அதிகரிக்காது என்று கூறியிருந்ததை நான் மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். நாம் பயங்கரவாதிகளின் இடங்களைதான் தாக்கியிருக்கிறோமே தவிர, அந்நாட்டு ராணுவத்தினரை அல்ல" என்று கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications