தாயைப் போல பாசம்..சிங்கத்தை போல சீற்றம்! மக்களை காத்துக் கொண்டே பாகிஸ்தானை பந்தாடிய இந்திய ராணுவம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி நடத்த முயன்ற தாக்குதலை வெற்றிகரமாக ஆயுதப்படைகள் தடுத்து நிறுத்தி இருக்கின்றன. அதிநவீன கண்காணிப்பு ரேடார் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், தொழில்நுட்பங்களைக் கொண்டு பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள், ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே நேரத்தில் இந்திய பாதுகாப்பு படைகள் தாயை போல எல்லையை பாதுகாத்துக் கொண்டே பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை துவம்சம் செய்துள்ளது. எட்டாம் தேதி இரவு நடந்த சில விஷயங்களை சுருக்கமாக பார்க்கலாம்..

கடந்த மாதம் 22 ஆம் தேதி பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 25க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் செவ்வாய் கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்குள் இந்தியா திட்டமிட்ட துல்லிய தாக்குதலை நடத்தியது. இதில் ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவித்தது.

india pakistan war international

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே போர் பதற்றம் தொடங்கிய நிலையில் நள்ளிரவு மற்றும் அதிகாலை பகுதிகளில் இந்தியாவை நோக்கி சீன தயாரிப்பு ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெற்ற எஸ் 400 ரக பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வெற்றிகரமாக இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா கூறி இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது.

ஜம்மு காஷ்மீர், அமிர்தசரஸ் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி ட்ரோன்கள், ஏவுகணைகள் அணிவகுத்து நிலையில் உடனடியாக உஷாரான இந்தியா தனது அதிநவீன தொழில்நுட்பங்கள், கண்காணிப்பு ரேடார்கள், மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் அவற்றை சுட்டு வீழ்த்தியது. காஷ்மீரை பொறுத்தவரை நேற்று தொடங்கிய மோதல் விடிய விடிய நடந்தது. பாகிஸ்தானின் அனைத்து கணைகளையும் ஒட்டுமொத்த பாதுகாப்பு படையினரும் திரண்டு நின்று அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தினார்.

அதே நேரத்தில் பாகிஸ்தானின் எஃப் 16, எஃப்17 உள்ளிட்ட மூன்று போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்தடுத்து வரிசையாக ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவினாலும் அவற்றை சுக்கு நூறாக உடைத்து நடுவானிலேயே வீழ்த்தியது இந்தியா. அதே நேரத்தில் பாகிஸ்தானை நோக்கி இந்தியாவில் தாக்குதல் தொடர்ந்தது. ஏற்கனவே பாகிஸ்தானில் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன் தாக்குதலில் அழிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் ஆகிய நகரங்களில் தாக்குதல் தொடர்ந்தது.

இந்தியாவிலிருந்து ஏராளமான ஏவுகணைகள் ட்ரோன்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து முக்கிய பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தின. குறிப்பாக இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானி வர்த்தக துறைமுகம் என அழைக்கப்படும் கராச்சி துறைமுகத்தின் மீதும் இந்தியா வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியது. விடிய விடிய இந்தியாவின் எல்லைப் பகுதிகள் உஷார் நிலையில், இருந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படை, இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகியவை இந்தியாவை தற்காத்துக் கொண்டே பாகிஸ்தானையும் தாக்கியது.

அதிகாலை வரை இந்த தாக்குதல் தொடங்கி நிலையில் பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே பஞ்சாபில் புகழ்பெற்ற பொற்கோயில் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் வெளியானதால் அங்கு உடனடியாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஒருபுறம் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து பாகிஸ்தானை நோக்கி தாக்குதல் நடத்திய நிலையில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் பீரங்கி மூலம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ராணுவ தளத்தின் மீதும் இந்தியா, ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் இரண்டு பேர் பலியானதாகவும் 4 பாகிஸ்தான் வீரர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாபில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது .விடிய விடிய தாக்குதல் நடந்தாலும் ஆறு மணிக்கு மேல் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அமைதி நிலவுகிறது. விடிய விடிய தூங்கவில்லை என மக்கள் கூறி இருக்கின்றனர். அதே நேரத்தில் இந்திய பாதுகாப்பு படைகள் தாயை போல தங்களுக்கு பாதுகாப்பு வழங்கியதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள். இந்த நிலையில் நேற்றைய தாக்குதல்கள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+