அவசர அவசரமாக அமைச்சர்களை சந்திக்கும் மோடி.. என்னங்க நடக்குது? பாரத் என பெயர் மாறும் இந்தியா? பின்னணி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(செப்.6) நடைபெறுகிறது. இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத்தலைவர் என குடியரசுத்தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்ட தொடர் நடக்க உள்ளது. இந்த நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் பாரத குடியரசு என மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 18 - 22 வரை இந்த சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(செப்.6) நடைபெறுகிறது. இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டமும் இன்று நடைபெற உள்ளது .
பெயர் மாற்ற சர்ச்சை: லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் இவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சரத் பவார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் மும்பையில் கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணிக்கு நாளுக்கு நாள் மக்களுக்கான ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது. இந்தியா கூட்டணி மக்கள் இடையே கவனம் பெற தொடங்கி உள்ளது. மோடி vs இந்தியா என்ற வாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணிக்கு செக் வைக்கும் விதமாக 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணி கவனம் பெற்றுள்ளதால், இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என்று மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பாஜக அரசு இதற்கான திட்டங்களில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பாரத குடியரசுத்தலைவர் என குடியரசுத்தலைவர் மாளிகை அழைப்பிதழ் அளித்துள்ளதும் இந்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசுத்தலைவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications