ரபேல் விமானங்களுக்கு.. பல்க் ஆர்டர் கொடுக்கும் உக்ரைன்! இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனம் தயாரிக்கும் ரபேல் விமானங்கள் சர்வதேச அளவில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்நிலையில் உக்ரைன், 100 ரபேல் விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்க இருக்கிறது. இதன் மூலம் ரபேல் விமான உற்பத்தியில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது.

சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 5ம் தலைமுறை விமானங்களை உருவாக்கி இருக்கின்றன. இருப்பினும் 4.5ம் தலைமுறை விமானங்களுக்கே உலக அளவில் மவுசு அதிகமாக இருக்கிறது.

Rafale India IAF

5ம் தலைமுறை விமானங்களை காட்டிலும் இது விலை குறைவாக இருப்பது முக்கியமான காரணம். மட்டுமல்லாது உலகின் மூன்று நாடுகள் மட்டுமே 5ம் தலைமுறை விமானங்களை வைத்திருப்பதால், அந்நாடுகளிடம் வர்த்தகம் மேற்கொள்வதன் மூலம், மற்ற நாடுகளிடமிருந்து பொருளாதார நெருக்கடிகள் தடைகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே உலக நாடுகள் 5ம் தலைமுறை விமானங்களை கவனமாக தவிர்த்து வருகின்றன.

இப்படி இருக்கையில்தான் பிரான்ஸ் நாட்டின் ரபேல் விமானம் சர்வதேச அளவில் கவனம் பெற்று இருக்கிறது. இத 4.5 தலைமுறையை சேர்ந்தது. இந்த விமானத்தை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. கடந்த 17ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் மற்றும் உக்ரைன் அதிபர் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் உக்கரைன் 100 விமானங்களை வாங்க இருப்பதாக கூறியிருக்கிறது.

இந்த ஆர்டர் உறுதி செய்யப்படும்பட்சத்தில் இந்தியாவுக்கு ரபேல் விமானம் தயாரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். அதாவது இந்த ஆண்டு இறுதிக்குள் 533 விமானங்களை உற்பத்தி செய்து கொடுக்க பிரான்சுக்கு ஆர்டர்கள் குவிந்து இருக்கிறன. இதில் ஏறத்தாழ பாதி விமானங்கள், அதாவது 300 விமானங்கள் உருவாக்கி ஒப்படைக்கப்பட்ட நிலையில் 233 விமானங்களை உடனடியாக உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதற்காக பிரண்ட்ஸ் தனது உற்பத்தி யூனிட் எண்ணிக்கையை இரண்டிலிருந்து 3 ஆக உயர்த்தி இருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 36 விமானங்களை உருவாக்க முடியும். இந்த வேகம் போதுமானதாக இல்லை எனவே நான்காவது புதிய யூனிட்டை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டு இருக்கிறது.

அதன்படி விமானத்தின் மிகவும் முக்கிய பாகங்கள், ஹைதராபாத்தில் உருவாக்கப்படும். பிரான்சின் டசால்ட் நிறுவனமும், இந்தியாவின் டாடா அட்வான்ஸ் சிஸ்டம் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இதனை தயாரிக்க உள்ளன. தற்போது உக்ரைன் ஆர்டரை விரைவாக கொடுக்க இந்தியாவில் ரபேல் விமானத்தின் மிக முக்கிய பாகங்களின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் பிரான்ஸ் விண்வெளி நிறுவனமும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் இணைந்து ஜெட் என்ஜினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்தப் பணி வெற்றி அடையும் பட்சத்தில் இந்தியாவிலேயே முழுமையான ரபேல் விமானத்தை உருவாக்க முடியும்.

தற்போது உலக அளவில் இந்த விமானங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், இந்தியா விமான உற்பத்தியில் குறிப்பிடத்தக்க லாபத்தை பெறும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+