அமெரிக்காவின் மூவ்.. லாக்டவுனில் சிக்கப்போகும் இந்தியா.. இன்னைக்கு நைட்டு விஷயம் தெரிஞ்சிடும்!
டெல்லி: ஈரான் விஷயத்தில், டிரம்ப் கொடுத்திருந்த காலக்கெடு இன்று இரவு 8 மணியுடன் முடியப்போகிறது. ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை எனில், மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்த இருக்கிறது. அப்படி நடந்தால் இந்தியா மிகப்பெரிய விளைவுகளை எதிர்கொள்ளும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
டிரம்ப் விதித்த கெடு, இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. இதற்குள் ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
தற்போதைய நிலவரப்படி, போர் முழு உச்சத்தை எட்டவில்லை. இருப்பினும் கூட அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில், எரிபொருள் தட்டுப்பாட்டையும் இதனால் லாக்டவுன் அமல்படுத்தும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் வணிக சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. முன்பு இருந்ததை போல எளிதாக சிலிண்டர் கிடைப்பதில்லை. ஒருவேளை டிரம்ப் மிரட்டல்படி, பெரும் போர் வெடித்தால், நிச்சயம் இந்தியா எரிபொருள் விஷயத்தில் கடுமையாக பாதிக்கப்படும்.
ஈரான் மீது தாக்குதல்
ஈரான் போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை எனில், அமெரிக்கா நடத்தும் தாக்குதல் பெரிய அளவில் இருக்கும். குறிப்பாக ஈரானின் கார்க் தீவை குறி வைத்துதான் தாக்குதல் நடத்தப்படும். ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90% இந்தத் தீவின் வழியாகவே நடைபெறுகிறது. அமெரிக்க அதிகாரிகள் இதனை ஈரானிய எண்ணெய் விநியோகத்தின் நரம்பு மண்டலம் என்று அழைக்கின்றனர்.
கார்க் தீவின் முக்கியத்துவம்
இது பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு சிறிய பவளப்பாறைத் தீவு. இதன் ஆழமான கடல் பகுதி ராட்சத எண்ணெய் கப்பல்கள் வந்து செல்ல ஏதுவாக உள்ளது. இங்கு சுமார் 3 கோடி பேரல் எண்ணெய் சேமித்து வைக்கும் வசதி உள்ளது. தற்போது சுமார் 1.8 கோடி பேரல் கச்சா எண்ணெய் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு தாக்குதல் நடந்தால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்கும். இந்தியாவிலும் சட்டென பெட்ரோல் டீசல் விலை உயரும்.
இந்தியா ஈரானிடமிருந்து பெரிய அளவில் எண்ணெய்யை வாங்கவில்லை. அப்படி இருக்கையில், ஈரான் மீதான தாக்குதல் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்று கேள்வி எழலாம்.
இந்தியாவுக்கு பாதிப்பு
இது குறித்து விளக்கம் அளிக்கும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள், "ரஷ்யா, சவுதி உள்ளிட்ட நாடுகளிலிருந்து நாம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறோம். இந்த எண்ணெய் நமக்கு போதுமானதுதான். ஆனால், ஈரானின் எண்ணெய்யை உலக நாடுகள் நம்பியிருக்கின்றன. இப்படி இருக்கையில் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும். இதனால் விலை உயரும். எனவே இந்தியாவிலும் எரிபொருள் விலை உயரும்.
எரிபொருள் விலை
மறுபுறம், போர் நடக்கும் ஈரானுக்கு பக்கத்து நாடுகளிலிருந்துதான் (சவுதி, கத்தார், பஹ்ரைன்) கச்சா எண்ணெய்யை நாம் இறக்குமதி செய்கிறோம் என்பதால், கச்சா எண்ணெய் கப்பலுக்கான இன்சூரன்ஸ் தொகையை, நிறுவனங்கள் உயர்த்தும். அந்த தொகை, எரிபொருள் விலை உயர்வாக நம்முடைய தலையில்தான் வந்து விடியும்.
இந்தியாவில் லாக்டவுன்
மறுபுறம் ஈரானிடம் சப்ளை இல்லையெனில், ரஷ்யாவிடம்தான் மற்ற நாடுகளும் அதிக எண்ணெய்யை வாங்கும். இதனால், ஏற்கெனவே நமக்கு சலுகை விலையில் கிடைத்து வந்த கச்சா எண்ணெய், இனி சலுகையுடன் கிடைக்காமல் போகலாம். இதெல்லாம் இந்தியாவில் எரிபொருள் விலையை அதிகரிக்கும். நிலைமை மோசமடைந்தால், பாகிஸ்தானை போல இந்தியாவிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications