டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஜனவரி 8 முதல் மீண்டும் விமான சேவை

Google Oneindia Tamil News

டெல்லி : உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியா-பிரிட்டன் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை ஜனவரி 8ம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.

பிரிட்டனில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா பரவல் அச்சத்தை அதிகரித்தது, இதனால் பிரிட்டனுக்கு இந்தியாவில் இருந்து விமானங்கள் இயக்க டிசம்பர் 21 ம் தேதி உடனடியாக தடை விதிக்கப்பட்டது. வரும் 7ம் தேதி வரை பிரிட்டனுக்கு விமானங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது.

India to lift ban on UK flights from 8 Jan in a limited manner amid new Covid strain

இந்நிலையில் உருமாற்ற கொரோனா குறித்த பீதி குறைந்த நிலையில் இந்தியாவிற்கு பிரிட்டனில் இருந்து விமானங்களை இயக்க விதிக்கப்பட்ட தற்காலிக தடையை நீக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. வரும், ஜனவரி 8 முதல் வரையறுக்கப்பட்ட முறையில் மீண்டும் விமான சேவைகள் தொடங்கும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

புது கட்டுப்பாடுகள்... வாகன சோதனைகள்... ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவை முடித்துக் கொண்ட பிரிட்டன்புது கட்டுப்பாடுகள்... வாகன சோதனைகள்... ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவை முடித்துக் கொண்ட பிரிட்டன்

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, " பிரிட்டனில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் அனுமதிக்கப்படும். ஒரு வாரத்திற்கு 15 விமானங்கள் என்ற வகையில் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 23 வரை அனுமதிக்கப்படும் என்றார்.

English summary
India to lift ban on UK flights from 8 Jan in a limited manner amid new Covid strain. Union Minister of Civil Aviation Hardeep Singh Puri today said, "Operations till 23 January will be restricted to 15 flights per week each for carriers of two countries to and from Delhi, Mumbai, Bengaluru and Hyderabad only."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X