டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகின் முதலாவது கொரோனாவுக்கான தடுப்பூசியை ஆகஸ்ட் 15-ல் அறிமுகம் செய்ய ஐ.சி.எம்.ஆர். திட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் முதலாவது கொரோனாவுக்கான தடுப்பூசியை ஆகஸ்ட் 15-ல் அறிமுகம் செய்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) திட்டமிட்டுள்ளது.

Recommended Video

    August 15 கொரோனாவுக்கான தடுப்பூசியை அறிமுகம் செய்ய ICMR திட்டம்

    உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் படுதீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் சோதனைகளும் நடத்தப்பட்டும் வருகின்றன.

    India to release first Covid-19 vaccine by August 15

    ஆனால் உலகம் முழுவதுமே கொரோனா முன்னெப்போதையும் விட மிக அதிகமாக தாக்கி வருகிறது. கொரோனா மரணங்கள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கின்றன.

    இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் (ஐ.சி.எம்.ஆர்)கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது ஐ.சி.எம்.ஆர்.

    60 வயதுக்கு மேற்பட்ட கொரோனா பாதித்த முதியோருக்கு வீட்டில் தனிமைப்படுத்துதல் கிடையாது- புது விதிமுறை 60 வயதுக்கு மேற்பட்ட கொரோனா பாதித்த முதியோருக்கு வீட்டில் தனிமைப்படுத்துதல் கிடையாது- புது விதிமுறை

    நாடு முழுவதும் 12 மையங்களில் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்வது என்பதுதான் ஐ.சி.எம்.ஆர். திட்டம்.

    இதனிடையே Zydus Cadila என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரிக்கவும் மனிதர்களுக்கு பரிசோதனை நடத்தவும் மத்திய அரசு கூறியுள்ளது.

    English summary
    Indian Council of Medical Research (ICMR) has partnered with Bharat Biotech International Limited (BBIL) for clinical trials of indigenous vaccine for the coronavirus disease.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X