'வளைகுடா'வுடன் வலுவாகும் இந்திய உறவு! குஜராத்தில் அமீரக வணிக மாநாடு- டெல்லியில் சவூதி கடற்படை தளபதி!
டெல்லி: குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024-ன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வணிக உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. மேலும் சவூதி அரேபியாவின் கடற்படை தளபதி 4 நாட்கள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 2024-ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வளர்ந்து வரும் ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை மேலும் வலியுறுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை அன்புடன் வரவேற்றதுடன், இந்தியா - ஐக்கிய அரபு அமீரக உறவுகளை மேம்படுத்துவதற்கான அவரது எண்ணங்களையும் முயற்சிகளையும் இந்தியா போற்றுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்தியா - ஐக்கிய அரபு அமீரக வர்த்தக உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வில், மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக பொருளாதார அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தகத்துறை இணையமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் ஜீயோடி ஆகியோரின் சிறப்பு உரைகளும், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேலின் சிறப்பு உரைகளும் இடம் பெற்றன. தொடக்க அமர்வின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் - இந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்த குழுமத்தின் வலைத்தளத்தை பியூஷ் கோயல், டாக்டர் தானி பின் அகமது அல் ஜீயோடி, பூபேந்திர ரஜினிகாந்த் படேல் ஆகியோர் முறைப்படி தொடங்கி வைத்தனர். இந்த அமர்வில் இந்தியாவின் வளர்ந்து வரும் புத்தொழில் வாய்ப்பை எடுத்துரைத்ததுடன், இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய புத்தொழில் தலைவர் மற்றும் ஸ்னாப்டீல், டைட்டன் கேபிடல் இணை நிறுவனர் குணால் பாஹ்லின் கருத்துகளும் இடம் பெற்றன.

இந்தியாவில் சவூதி கடற்படை தளபதி: இதனிடையே சவூதி அரேபியாவின் கடற்படையின் தளபதி அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி இந்தியாவில் நேற்று முதல் 4 நாள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சவூதி அரேபியா, இந்தியக் கடற்படைகளுக்கு இடையேயான நீண்டகால உறவுக்கு இப்பயணம் ஒரு சான்றாகும்.

அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாய்லி இன்று டெல்லியில் இந்தியக் கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமாரை சந்தித்து, கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள், நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

அட்மிரல் பஹத் அப்துல்லா எஸ் அல்-கோஃபாலி, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி, பாதுகாப்புத்துறைச் செயலாளர், விமானப்படைத் தளபதி, ராணுவத் துணைத் தளபதி ஆகியோரையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications