தமிழக மீனவர்கள் மீது கை வைக்க கூடாது.. கொழும்பு பேச்சுவார்த்தையில் இந்தியா வலியுறுத்தல்!
டெல்லி: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறைகளில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மீனவர்கள், தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ, எல்லை தாண்டி மீன்பிடித்துவிட்டதாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்குகிறது; கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது; சர்வதேச ஒப்பந்தங்களை மீறி தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து சித்ரவதை செய்கிறது; தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து கட்டவே முடியாத பெரும் அபராதத் தொகையை விதித்து வருகிறது.

இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்துக்கு எதிராக தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார்.
இந்த நிலையில் இலங்கைக்கு மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் குழு சென்றுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்றட இரு நாடுகளில் 6-வது ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த குழு பங்கேற்றது. அப்போது, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலைக் கைவிட வேண்டும் என இந்திய அதிகாரிகள் குழு வலியுறுத்தியது. மேலும் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் இந்திய அதிகாரிகள் வலியுறுத்தனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications