இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்
டெல்லி: ரேர் எர்த் மெடல் சப்ளையில் சீனா இப்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதை வைத்து சீனா பிற நாடுகளை மிரட்டியும் வருகிறது. இந்தச் சூழலில் தான் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து சீனாவுக்கு செக் வைத்துள்ளன. சுமார் 2100 கோடி ரூபாய் முதலீட்டில் இரு நாடுகளும் முக்கிய டீலை போட்டுள்ளது, சீனாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
டெல்லியில் இப்போது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடந்து வருகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, இரு நாடுகளுக்கும் இடையே கனிமவளப் பாதுகாப்பு சார்ந்து முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

திருப்புமுனை
சீனாவின் புதிய ஏற்றுமதி உத்தரவுகள் சர்வதேச எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமொபைல் சப்ளை செயின்களை பாதிக்கும் சூழலில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் சர்வதேச அரங்கில் ஒரு மிக பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
செமிகண்டக்டர்கள், மொபைல் சிப்கள், மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கு அஸ்திவாரமாக விளங்கும் லித்தியம், கோபால்ட் மற்றும் அரிய வகை புவி தாதுக்களின் அகழ்வாராய்ச்சி, சுத்திகரிப்பு, மறுசுழற்சி சார்ந்த முதலீடுகளை உலகளவில் பரவலாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
சீனா மீது பாய்ச்சல்
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, சீனாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் விமர்சித்தார். டெல்லியில் பேசிய அவர், "நம்மைப் போன்ற துடிப்பான, நவீனக் கண்டுபிடிப்புகளைக் கொண்ட பொருளாதார நாடுகள், தங்களின் அடிப்படை உள்கட்டமைப்பு மூலப்பொருட்களுக்கு ஒரே நாட்டை நம்பி இருக்க முடியாது. போர் அல்லது மோதல் காலங்களில் மட்டுமன்றி, சாதாரணக் காலங்களிலும் இதனை அவர்கள் நமக்கு எதிராகப் பயன்படுத்தி நமது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தர நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த ஒப்பந்தம் அதற்கு அந்த ஆதிக்கத்தைத் தடுக்கும்" என்றார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசுகையில், "தற்போதைய சவால்கள் நிறைந்த உலக சூழலில், இந்த ஒப்பந்தம் மிகவும் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான ராஜதந்திர நகர்வாகும். இது கனிம வள சப்ளை செயினைப் பாதுகாப்பதோடு புதிய திட்டங்களுக்கான நிதியுதவிக்கும் வழிவகுக்கும்" எனப் பெருமிதம் தெரிவித்தார்.
பின்னணி
இந்த மெகா ஒப்பந்தத்திற்கான அடித்தளம் கடந்த பிப்ரவரி 4ம் தேதி வாஷிங்டனில் நடைபெற்ற 'ஃபோர்ஜ்' (FORGE) கனிம வள மாநாட்டின் போதே போடப்பட்டுவிட்டது. அமெரிக்கா வழிநடத்தும் 'பாக்ஸ் சிலிக்கா' (Pax Silica) என்ற சர்வதேச கூட்டணியில் கடந்த பிப்ரவரி 20ல் இந்தியா முறைப்படி கையெழுத்திட்டதன் தொடர்ச்சிதான் இந்த டெல்லி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ரூ.2100 கோடி
லத்தீன் மொழியில் 'பாக்ஸ்' என்றால் அமைதி, 'சிலிக்கா' என்பது செமிகண்டக்டர்களின் மூலப்பொருள்.. அதாவது 'டிஜிட்டல் யுகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு' என்பதே இதன் அர்த்தம். உலகளவில் 70% கனிம சுத்திகரிப்பையும், 90% அரிய தாதுக்கள் உற்பத்தியையும் சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனை உடைக்க, அமெரிக்கா தனது 'பாக்ஸ் சிலிக்கா ஃபண்ட்' மூலம் $250 மில்லியன் டாலர் (சுமார் ₹2,100 கோடி) அவசர முதலீட்டைத் தொடங்கி, சீனாவுக்கு மாற்றாக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 12 நட்பு நாடுகளின் சப்ளை செயினை பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளது
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் ஒரு ஜாக்பாட் என்றே சொல்லலாம். ஏனென்றால் இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன், 'மேக் இன் இந்தியா' மற்றும் ₹7,280 கோடி மதிப்பிலான ரேர் எர்த் மெடல் தயாரிப்புத் திட்டங்களுக்கு (REPM) தேவையான மூலப்பொருட்கள் தடையின்றிக் கிடைக்க இந்த ஒப்பந்தம் உத்தரவாதம் அளிக்கிறது. பாக்ஸ் சிலிக்கா திட்டத்தின் கீழ் பிலிப்பைன்ஸின் லுசோன் பகுதியில் அமெரிக்கா அமைத்து வரும் 9,450 ஹெக்டேர் ஏஐ ஸ்மார்ட் சிட்டி மற்றும் நிக்கல் சுத்திகரிப்பு மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்தியாவிற்கு வழிவகை பிறந்துள்ளது.
செமிகண்டக்டர் சிப்கள்
20-ம் நூற்றாண்டு கச்சா எண்ணெய்யால் ஆளப்பட்டது என்றால், 21ம் நூற்றாண்டு செமிகண்டக்டர் சிப்களால் ஆளப்படுகிறது என்ற எதார்த்தத்தை இந்த டெல்லி குவாட் மாநாடு உணர்த்தியுள்ளது. வளைகுடாவில் ஈரான் போர் தரும் பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இந்தியாவின் பாய்ச்சலை முடக்க நினைக்கும் சீனாவின் சப்ளை செயின் மிரட்டல்களுக்கு, அமெரிக்காவுடன் கைகோர்த்து இந்தியா தரமான பதிலடியைத் தான் கொடுத்துள்ளது.
-
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
வெறும் 12 நிமிடங்களில் ரூ.94.5 லட்சம் கோடி லாபம்.. ஒரே நாளில் எல்லாம் மொத்தமா மாறிடுச்சு -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது!












Click it and Unblock the Notifications