அடிமடியிலேயே கைவைத்த டிரம்ப்.. அமெரிக்காவின் 25% வரி விதிப்பால் சரியப்போகும் ஜிடிபி.. பெரிய சிக்கல்
டெல்லி: நாளை முதல் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதிக்க உள்ளார். இதனால் அமெரிக்காவுக்கான நம் நாட்டின் ஏற்றுமதி சரிய வாய்ப்புள்ளது. இது நேரடியாக நம் நாட்டின் ஜிடிபி எனும் உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் டிரம்பின் 25 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில் நம் நாட்டின் ஜிடிபி 0.2 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை சரியும் என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை முதல் நம் நாட்டுக்கு வரிகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் அதிபரானது முதல் ஒவ்வொரு நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்து வருகிறார்.

அந்த வகையில் நம் நாட்டுக்கு 25 சதவீத வரியை விதிக்க உள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். நாளை முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
இந்த வரி விதிப்பால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும். இதனால் நம் நாட்டின் தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும். அதோடு கூடுதல் வரி விதிப்பால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களின் ஏற்றுமதி சரியவும் வாய்ப்புள்ளது.
உலகிலேயே மிக அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. அனைத்து நாடுகளையும் விட கொடுமையான, விரும்பத்தகாத வர்த்தக தடைகளை இந்தியா வைத்துள்ளது. எனவே ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியும், ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் நம் நாட்டுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசு சார்பில் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நாளைக்குள் வர்த்தகம் தொடர்பாக இடைக்கால ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இந்த ஒப்பந்தம் சக்சஸ் ஆகும் பட்சத்தில் நம் நாடு 25 சதவீத வரியில் இருந்து தப்பிக்கும். இல்லாவிட்டால் 25 சதவீத வரி என்பது விதிக்கப்படும். டிரம்பின் இந்த முடிவுக்கு நம் நாடு அமெரிக்காவில் இருந்து குறைந்த அளவில் இறக்குமதி செய்வதும், ரஷ்யாவுடன் நட்பில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதும் தான் காரணம்.
இதற்கிடையே, டிரம்ப் அறிவித்த 25 சதவீத வரி விதிப்பால் நம் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி நம் நாட்டில் மருந்து துறை, கடல்சார் உணவு பொருட்கள், ஜவுளி துறைகள், ஆட்டோமொபைல் துறைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த துறைகள் உள்பட பிற முக்கிய துறைகள் சார்ந்த பொருட்களுக்கு அமெரிக்கா முதற்கட்டமாக கூடுதல் வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. இது நம் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறையும்போது அந்த நாட்டுக்கு பதில் மாற்று மார்க்கெட்டை பிடிக்க வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்படும்.
மேலும் இது நம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கும் வகையில் உள்ளது. அதாவது ஜிடிபி கடுமையாக பாதிக்கப்படும். 0.2 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை ஜிடிபி சரியக்கூடும் என்றும் வர்த்தக நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
-
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications