"எப்ஸ்டீன் பைல்ஸ்".. டிரம்ப் வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி கையெழுத்திட்டது ஏன்? ராகுல் பரபரப்பு
வாஷிங்டன்: ‛‛டொனால்ட் டிரம்ப்பின் அழுத்தம் காரணமாக பிரதமர் மோடி அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலமாக நம் நாட்டை பிரதமர் மோடி அடகு வைத்துள்ளார். எப்ஸ்டீன் பைல்ஸில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல தகவல்கள் உள்ளன. அதனாலும் அழுத்தம் இருக்கிறது.'' என்று நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்தார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறைக்கும் 25 சதவீதம், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதம் என்று இன்னொரு 25 சதவீதம் என 50 சதவீத வரியை போட்டார். இதற்கிடையே தான் பிரதமர் மோடியும், டொனால்ட் டிரம்பும் நேற்று தொலைபேசி வழியாக பேசினர்.

அப்போது இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பபட்டது. இதையடுத்து வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக டிரம்ப் குறைத்தார். அதோடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
500 பில்லியன் டாலர் வர்த்தகம்
அதற்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் கொள்முதல் செய்ய உள்ளார். அதேபோல் வரி குறைப்புக்கு கைமாறாக இந்தியாவும், அமெரிக்கா பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைக்க முன்வரும்.
அதுமட்டுமின்றி எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்பட பல துறைகளில் பிரதமர் மோடி, 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருட்களை அமெரிக்காவில் இருந்து வாங்குவதாக உறுதியளித்துள்ளார் என்றும் டிரம்ப் கூறினார்.
எதிர்க்கட்சிகள் அமளி
இந்த வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் லோக்சபாவை இன்று முடக்கின.
கூச்சல், குழப்பத்தால் லோக்சபா முடங்கியது. மேலும் டிரம்ப்பின் அழுத்தத்துக்கு பயந்து அமெரிக்காவிடம் வ 500 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் செய்ய மோடி ஒப்புக்கொண்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றன.
மோடிக்கு அழுத்தம் - ராகுல்
இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: பிரதமர் மோடி பதற்றத்தில் இருக்கிறார். பல மாதங்களாக நிலுவையில் இருந்த அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் நேற்று இரவு அவசர அவசரமாக கையெழுத்திடப்பட்டுள்ளது.
கடும் அழுத்தம் காரணமாகவே பிரதமர் மோடி வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இப்போது எங்கே தனது பிம்பம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சுகிறார். முக்கியமான விஷயம் என்னவென்றால், நமது பிரதமர் சமரசம் செய்து கொண்டுள்ளார். க்கள் இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
நாட்டையே விற்றுவிட்டார்
எதிர்க்கட்சி தலைவரான என்னை ஜனாதிபதி உரை பற்றி பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இப்படி நடப்பது இதுதான் முதல் முறை. நரேந்திர மோடி இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலமாக விவசாயிகள், மக்களின் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டையே விற்றுவிட்டார்.
அதோடு நரேந்திர மோடி இப்போது பயந்து கொண்டிருக்கிறார். அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அதை உடைக்கிறார்கள். அமெரிக்காவில் அதானி மீது ஒரு வழக்கு உள்ளது. அது உண்மையில் மோடி மீதான வழக்கு தான்.
எப்ஸ்டீன் பைல்ஸ்
மேலும் எப்ஸ்டீன் பைல்ஸில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல தகவல்கள் உள்ளன. அதனாலும் அழுத்தம் இருக்கிறது. இவை இரண்டும் அழுத்தத்துக்கான முக்கிய புள்ளிகள். இதை நாடு புரிந்துகொள்ள வேண்டும்'' என்று கடுமையாக சாடி உள்ளார்.
இதில் ராகுல் காந்தி கூறியுள்ள எப்ஸ்டீன் பைல்ஸ் என்பது அமெரிக்கா உள்பட மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கிறது. இது ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற பாலியல் குற்றவாளியுடன் தொடர்புடையது. அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் டிரம்ப் உள்பட பல முன்னாள் அதிபர்களுடன் நண்பர்களாக இருந்தனர்.
எப்ஸ்டீன் பைல்ஸ் என்பது என்ன?
ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீது சிறுமிகள் உள்பட பல பாலியல் வழக்குகள் பதிவாகின.ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் இறந்தார். அவரது மரணம் தற்கொலை என்று கூறப்படுகிறது. இருப்பினும் பல்வேறு பிரபலங்களில் அந்தரங்க ரகசியங்களை ஜெஃப்ரி எப்ஸ்டீன் அறிந்து வைத்திருந்ததால் அவர் வெளியில் வந்தால் பல முக்கிய நபர்களின் பெயர்கள் அடிபடும் என கருதிய பெரும் புள்ளிகள், அவரை சிறையில் வைத்தே அவரை தீர்த்து கட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஒவ்வொரு பிரபஙலங்களுடன் தனக்கு இருக்கும் தொடர்பு குறித்து பலருக்கும் இ-மெயில் அனுப்பி உள்ளார். போட்டோக்களை வைத்துள்ளார். இவை அனைத்தும் சேர்த்து தான் எப்ஸ்டீன் பைல்ஸ் என்று கூறப்படுகிறது.
பைல்ஸில் மோடியின் பெயர்
இந்த ஆவணங்கள் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு 30 லட்சத்து்கும் அதிகமான பக்க ஆவணங்கள், சுமார் 2,000 வீடியோக்கள் மற்றும் 180,000 போட்டோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரின் பெயர்கள் உள்ளன. அதில், 2017 ஜூலை 9 ம் தேதியிட்ட இ-மெயிலில் ‛‛பிரதமர் மோடி ஆலோசனைகளை பெற்றார். இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்தார். அது நல்ல பலனளித்தது'' என்று கூறியிருந்தார்.
இந்த இ-மெயிலை எப்ஸ்டீன் அனுப்புவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக 2017 ஜூலை 4 முதல் ஜூலை 6 வரை பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்த நிலையில் ராகுல் காந்தி தற்போது எப்ஸ்டீன் பைல்ஸ் தொடர்பான அழுத்தம் கூட டிரம்ப் உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications