தரமான சம்பவம்.. அமெரிக்கா, பிரிட்டன், ஓமன், நியூசிலாந்து.. வர்த்தக டீல் போட்டு தூக்கிய இந்தியா
டெல்லி: இந்தியா வர்த்தகர்களுக்கு மிக முக்கியமான செய்திகள் அடுத்தடுத்து வரவுள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தக டீல் இறுதியாகியுள்ள நிலையில், அது எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது தொடர்பாக வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அமெரிக்கா மட்டுமின்றி, இங்கிலாந்து, ஓமன், நியூசிலாந்து எனப் பல நாடுகளுடன் பிஸ்னஸ் செய்வது ஈஸியாக போகிறது.
கடந்தாண்டு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வோருக்கு அவ்வளவு ஒன்றும் சிறப்பான ஆண்டாக அமையவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50% வரிகளை விதித்தார். இதனால் உலகின் அதிக மதிப்பு மிக்க சந்தையான அமெரிக்காவில் பிஸ்னஸ் செய்வதில் இந்திய வர்த்தகர்களுக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டது.

வர்த்தக டீல்
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்பாக நீண்ட ஆலோசனை நடந்தது. கடந்த நவம்பர் முதலே இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்தச் சூழலில் தான் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து இம்மாதத் தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது.
இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு தகவலும் இல்லாமல் இருந்தது. எப்போது இது இறுதியாகும், எப்போது இது அமலுக்கு வரும்.. ஒப்பந்தம் குறித்த இதர தகவல்கள் என்ன எனப் பல கேள்விகள் நம் முன்பு இருந்தது. இதற்கிடையே இப்போது இது தொடர்பாக வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அடுத்தடுத்து இன்பச் செய்தி
இந்தியா- அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டு ஏப்ரலில் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா மட்டுமின்றி, இங்கிலாந்து, ஓமன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும் அதே மாதத்தில் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல நியூசிலாந்துடனான ஒப்பந்தம் செப்டம்பரில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் மூன்று நாள் கூட்டம், அமெரிக்காவில் வரும் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் மார்ச் மாதமே இடைக்கால ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.
கூட்டறிக்கை
இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டதாக இரு நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டன. அதைத் தொடர்ந்தே இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை 23ம் தேதி தொடங்குகிறது. அதில் இரு நாடுகளுக்கும் இடையேயான டீல் சட்டப்பூர்வ ஆவணமாகும். இந்தியப் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு வர்த்தக அமைச்சக இணைச் செயலாளர் தர்பன் ஜெயின் தலைமை தாங்குவார்.
இந்திய வர்த்தகர்களுக்கு நல்ல செய்தி
இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளும் பல பொருட்களுக்குப் பரஸ்பர இறக்குமதி வரிச் சலுகைகளை வழங்கும். இந்தியப் பொருட்களுக்கான வரிகளை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்தது. ரஷ்யக் கச்சா எண்ணெய் கொள்முதலுக்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரிகளையும் அமெரிக்கா ஏற்கனவே முழுமையாக நீக்கிவிட்டது. அதாவது கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் இந்திய ஏற்றுமதிக்கு 50% வரிகளை அமெரிக்கா விதித்தது. இப்போது டீல் இறுதியானதால் 50% வரி 18%ஆக குறைந்துள்ளது.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications