"விவசாய துறைக்கு பாதிப்பில்லை".. அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் பற்றி லோக்சபாவில் பியூஷ் கோயல் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 2ம் தேதி பிரதமர் மோடி - டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்தியா மீதான வரியை 18 சதவீதம் ஆக குறைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டார். விவசாயம் போன்ற முக்கிய துறைகளின் பாதுகாப்பு உறுதி செய்வதில் வெற்றி பெற்று இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.அமெரிக்கா உடனான ஒப்பந்தம் வேளாண் துறையில் புதிய தொழில்களை உருவாக்க வழிவகுக்கும்'' என்று மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

india-us-trade-deal-we-ensuring-the-protection-of-agriculture-and-other-sectors-says-piyush-goya

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் மத்திய அரசு விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த அமளி காரணமாக காலை 11 மணிக்கு தொடங்கிய அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியது.

எதிர்க்கட்சியினர் அமளி

அப்போதும் எதிர்க்கட்சிகள் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதிக்க கோரினர். இதையடுத்து மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளிப்பதாக கூறினார். அதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டு அமளி செய்தனர்.

18% ஆக குறைக்க டிரம்ப் ஒப்புதல்

இந்த அமளிக்கு நடுவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி விளக்கமளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛ கடந்த ஓராண்டாக அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

வரி விதிப்பு பதற்றங்களுக்கு நடுவே பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி பிரதமர் மோடி - டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்தியா மீதான வரியை 18 சதவீதம் ஆக குறைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

விவசாய துறைக்கு பாதிப்பில்லை

மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஒப்பந்தம் வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள புதிய தொழில்களை உருவாக்க வழிவகுக்கும்.

அதேவேளையில் விவசாயம் போன்ற முக்கிய துறைகளின் பாதுகாப்பு உறுதி செய்வதில் வெற்றி பெற்று இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும்'' என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+