பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்! இடைமறித்து அழித்த இந்தியாவின் எல்-70!
டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதலை தொடங்கியது. அப்போது அந்த டிரோன்களை எல்லாம் இந்தியாவின் எல்-70 கொண்டு தகர்த்தப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இந்தியா பதிலடி கொடுத்தது. இதில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்கள் ஏவுகணைகள் மூலம் அழிக்கப்பட்டன.

இதனால் பயங்கரவாதிகள் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். முக்கிய தீவிரவாத அமைப்புகளின் இடங்களும் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் இதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு அமைச்சர் அரைகூவல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு பாகிஸ்தான் சார்பில் ஜம்மு காஷ்மீரில் டிரோன் தாக்குதல் தொடங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் அக்னூரில் திடீரென சைரன்கள் ஒலித்தன. இந்த சைரன்கள் என்பவை எதிரிநாடுகளின் டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் போது ஒலிக்கவிடப்படும்.
இந்த சப்தம் கேட்டதும் பொதுமக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். அக்னூர் பகுதியில் வானில் சிவப்பு நிறத்தில் டிரோன்கள் மின்னல் வெட்டு போல வந்து சென்றன. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் டிரோன்களை கண்களால் பார்த்ததாக சொன்னார்கள்.
இதனிடையே நம் நாட்டு வான் வெளியில் இருக்கும் பாதுகாப்பு சிஸ்டம் செயல்பட தொடங்கி பாகிஸ்தானின் டிரோன்களை இடை மறித்து அழித்துவிட்டது. எனினும் பாகிஸ்தான் தொடர்ந்து டிரோன்களை செலுத்துகின்றன.
இதனால் ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெயல்சால்மரில் மட்டும் 20 ஏவுகணைகளை இந்தியா இடைமறித்து அழித்தது.
சத்வாரி, சம்பா, ஆர்.எஸ். புரா உள்ளிட்ட இடங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியது. ஆனால் அவற்றை எல்லாம் எல்70 அழித்துவிட்டது. எல் 70 என்பது மிகவும் வலிமையான பாதுகாப்பு ஆயுதமாகும். இவை பாகிஸ்தானின் சிறிய டிரோன்களை இடைமறித்து அழித்தது. அது போல் பாகிஸ்தானின் ஜே 17 போர் விமானத்தை தகர்த்தது இந்திய விமானப்படை












Click it and Unblock the Notifications