இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எப் 16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா!
Recommended Video

டெல்லி: இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் எஃப் 16 போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இந்தியாவின் நவ்ஷோரா பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் எஃப் 16 என்ற போர் விமானம் குண்டு வீசுவதற்காக ஊடுருவியது. இதை பார்த்த இந்திய விமான படையினர் அந்த விமானத்தை விரட்டியடித்தனர்.

இதையடுத்து மீண்டும் மீண்டும் அந்த விமானம் ஊடுருவியது. இதையடுத்து பாகிஸ்தான் 3 கி.மீ. தூரம் உள்ள லே பள்ளத்தாக்கில் எஃப் 16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
அப்போது அந்த விமானத்தின் விமானி பாராசூட் மூலம் கீழே குதித்தார். அவர் பாகிஸ்தான் நிலப் பகுதியில் குதித்து விட்டார். அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது தப்பி ஓடி விட்டாரா என்பது தெரியவில்லை. விமானமும் பள்ளத்தாக்கில் விழுந்து சாம்பலானது.
இதனால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் ஊடுருவுவதால் பாதுகாப்பு கருதி ஜம்மு- காஷ்மீர் வான் பகுதியில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications