இந்தியா முழுக்க முடங்கும் விமான சேவை? "நிலைமை மோசம்.." மத்திய அரசுக்கு பறந்த கடிதம்
டெல்லி: வளைகுடா போரால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தாங்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் மத்திய அரசு இதில் தலையிடவில்லை என்றால் விமானங்களை இயக்கவே முடியாத சூழல் கூட ஏற்படலாம் என விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அவர்கள் மத்திய அரசுக்கும் அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.
இந்தியாவில் விமான பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் விமானங்களில் பயணிப்போர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இப்போது திடீரென இந்திய விமானப் போக்குவரத்துத் துறை தற்போது ஒரு மிகப் பெரிய நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

எரிபொருள் விலை உயர்வு
ATF எனப்படும் விமான எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மிகப் பெரிய அழுத்தத்தை எதிர்கொண்டு இருப்பதாக ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. நிலைமை மோசமாவதைத் தடுக்க மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் என விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடிதம்
ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற முன்னணி நிறுவனங்கள் உள்ள இந்திய ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு இந்த அவசரக் கடிதம் எழுதியுள்ளது. அதில் எரிபொருள் விலை உயர்வால் லாபம் என்பது இல்லாமல் போய்விட்டதாகவும் விமானங்களை இயக்க வேண்டுமா என்று யோசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை
அவர்கள் மேலும், "உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ₹2 லட்சம் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. பொதுவாக ஒரு விமான நிறுவனத்தின் மொத்த ஆபரேட்டிங் செலவில் 30% முதல் 40% வரை மட்டுமே எரிபொருளுக்காக இருக்கும். ஆனால், தற்போதைய விலை உயர்வால் இது 55% முதல் 60% ஆக எகிறியுள்ளது. இது நிறுவனங்களின் லாப வரம்பை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது. எரிபொருள் விலை உயர்வால் பல வழித்தடங்களில் விமானங்களை இயக்குவது பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றதாக மாறியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
குறிப்பாகச் சர்வதேச வழித்தடங்களில் எரிபொருள் செலவைச் சமாளிக்க முடியாமல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. இந்த நெருக்கடியிலிருந்து மீள, மத்திய அரசு சில உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு FIA வலியுறுத்தியுள்ளது..
- கலால் வரி நீக்கம்: விமான எரிபொருள் மீதான 11% மத்திய கலால் வரியைத் தற்காலிகமாக நீக்க வேண்டும்.
- வாட் வரி குறைப்பு: சில மாநிலங்களில் 25% வரை இருக்கும் VAT வரியைக் குறைக்க மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
- விலை நிர்ணய முறை: கச்சா எண்ணெய் விலை சந்தையில் குறைந்தாலும், சில காரணங்களால் விமான எரிபொருள் விலை குறையாமல் இருக்கிறது. இந்த முரண்பாட்டைச் சரி செய்ய வேண்டும்.
சர்வதேசச் சந்தையுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வரி விகிதங்கள் அதிகமாக இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டிப் போட முடியாமல் உள்நாட்டு நிறுவனங்கள் பின்வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
வளைகுடா
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் நிலவும் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது நேரடியாக இந்தியாவின் விமான எரிபொருள் விலையில் எதிரொலிக்கிறது. ஒருபுறம் உலகளாவிய பதற்றம், மறுபுறம் உள்ளூர் வரிகள் என இருமுனைத் தாக்குதலில் இந்திய விமானத் துறை சிக்கியுள்ளது.
விமான நிறுவனங்கள் தற்போது இந்த விலை உயர்வின் ஒரு பகுதியைத் தாங்களே ஏற்றுக் கொண்டாலும், இன்னும் நீண்ட காலத்திற்கு இதைத் தொடர முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. இதன் நேரடி பாதிப்பு பயணிகளின் பாக்கெட்டில்தான் விழப்போகிறது.
விமானங்களையே இயக்க முடியாது!
அரசு வரிச்சலுகை அளிக்காவிட்டால், வரும் நாட்களில் விமானக் கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும். மேலும், லாபமில்லாத பல வழித்தடங்களில் விமானச் சேவைகள் குறைக்கப்படவோ அல்லது முழுமையாக ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளது. ஏற்கனவே விமான டிக்கெட் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்குக் கணிசமான தொகையாகவே இருந்த நிலையில், அது சீக்கிரமே எட்டாக்கனியாக மாறிவிடுமோ என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications