மனைவிக்கு பிரசவ நேரம்.. துருக்கிக்கு போன ராணுவ வீரர்! பிறந்த மகன் பெயர் தெரியுமா? ஹைலைட்டே அதுதான்!

முதல்ல நாட்டுக்கு சேவை செய்யுங்க என்று பிரசவ நேரத்திலும் தன் கணவரான ராணுவ வீரரை, துருக்கி நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் இந்திய கர்ப்பிணி மனைவி

Subscribe to Oneindia Tamil

டெல்லி : முதல்ல நாட்டுக்கு சேவை செய்யுங்க என்று பிரசவ நேரத்திலும் தன் கணவரான ராணுவ வீரரை, துருக்கி நாட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் இந்திய கர்ப்பிணி மனைவி. அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 7.8 என்ற அளவில் பதிவாகியிருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட பூமி அதிர்ச்சியில் அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்துவிழுந்தன. இரண்டு நாடுகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 35,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர். இன்னும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நிலநடுக்கத்தின் கோரத்தில் சிக்கியுள்ள துருக்கி மற்றும் சிரியாவிற்கு இந்தியா உதவி செய்து வருகிறது. மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. மேலும் மீட்புப்பணிகளையும் இந்தியா உதவி செய்து வருகிறது.

கர்ப்பிணி மனைவி

கர்ப்பிணி மனைவி

இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவி செய்வதற்காக இந்தியா 'ஆபரேஷன் தோஸ்த்'தை தொடங்கியது. இதில் 99 பேர் கொண்ட குழுவை இந்தியா அனுப்பியது. அவர்களும் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அந்த மீட்பு படையில் பணியாற்றுபவர் தான் ஹவில்தார் ராகுல் சவுத்ரி. உத்தரபிரதேசத்தில் உள்ள ஹபூரில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிக்கும் சவுத்ரி, மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், தனது குழந்தையை உலகிற்கு வரவேற்க தயாராக இருந்தார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

ஆனால் துருக்கியின் மீட்புப்பணிக்கு அனுப்புவதற்கு சவுத்ரியை தேர்வு செய்திருந்தது இந்திய ராணுவம் , அவரின் பாஸ்போர்ட்டையும் தேர்ந்தெடுத்து முத்திரையிட்டுவிட்டது. இது தொடர்பாக ஹவில்தார் ராகுல் சவுத்ரி கூறும் போது "என்னை துருக்கிக்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்த உடன் நேராக என் மூத்த அதிகாரிகளிடம் சென்று, பிப்ரவரி 8-ம் தேதி என் மனைவிக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்போவது பற்றி கூறினேன்.

ஆபரேஷன் தியேட்டர்

ஆபரேஷன் தியேட்டர்

ஆனால் அவரோ என் மனைவியிடம் துருக்கி விவகாரம் தொடர்பாக பேச சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.. நான் அவளிடம் மீட்புப்பணிக்கு செல்லவிருப்பதைச் சொன்னேன். என் மனைவி முதல்ல நமக்கு நாடு தான் முக்கியம், சேவை செய்யுங்க என்று என நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்தார். நானும் புறப்பட்டுவிட்டேன். நான் விமானத்தில் ஏறியபோது, என் மனைவியை ஆபரேஷன் தியேட்டருக்குள் கொண்டு போய்டாங்க..

துர்கி சவுத்ரி

துர்கி சவுத்ரி

துருக்கியில் நான் இறங்கியவுடன், எனக்கு மகன் பிறந்த செய்தியை கோரக்பூரைச் சேர்ந்த சக ராணுவ வீரரான சம்பி கமலேஷ் குமார் தெரிவித்தார். இதனை கேட்ட சக ராணுவ வீரர்களும நண்பர்களும் என் குழந்தைக்கு 'துர்கி சவுத்ரி' என்று பெயரிட விரும்புகிறார்கள்" என கூறியிருக்கிறார். குழந்தை பெற்றெடுக்க வேண்டிய தருணத்தில் தன் கணவனை, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதற்காக அனுப்பி வைத்த பெண்ணின் செயலை பலரும் பாராட்டுகிறார்கள். துருக்கிக்கு இந்தியா விமானத்தில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து அனுப்பி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+