Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயத்தில் பதுங்கும் பாக்.,! இந்திய ராணுவத்தில் புதிய படைப்பிரிவுகள்.. ஆட்டக்களம் மாறுது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள், போர் சூழலையும் மாற்றியிருக்கிறது. இந்நிலையில் இந்த சூழலுக்கு ஏற்ப இந்திய ராணுவம் தன்னை மறு வடிவமைப்பு செய்திருக்கிறது. அதன்படி ட்ரோன் ஆயுதங்களை கையாள புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது நிச்சயம் பாகிஸ்தானுக்கு நல்ல செய்தியாக இருக்காது.

உக்ரைன்-ரஷ்யா மோதல், ஈரான்-இஸ்ரேல் மோதல் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து வெடித்த மோதல்.. என 2024-2025ல் நடந்த முக்கியமான மோதல்களில் ட்ரோன்கள் மிகப்பெரிய பங்கு வகித்திருந்தன. எனவே இந்திய ராணுவம், ட்ரோன்களை கையாள புதிய படைப்பிரிவுகளை உருவாக்கி வருகிறது.

Indian Army drone Pakistan

'ஷக்திபான்' படைப்பிரிவு

இந்த படைப்பிரிவுக்கு 'ஷக்திபான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. 15 முதல் 20 'ஷக்திபான்' படைப்பிரிவுகளை இந்திய ராணுவம் உருவாக்கி வருகிறது. இவை திரள் ட்ரோன்கள், சுழலும் வெடிபொருட்கள் மற்றும் 5 கி.மீ முதல் 500 கி.மீ வரையிலான இலக்குகளைத் தாக்கக்கூடிய நவீன ஆளில்லா வான்வழி வாகனங்களை கையாளும். ஷக்திபான் படைப்பிரிவுகள் இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவின் கீழ் இயங்கும். இந்த படைப்பிரிவின் சில ஆரம்ப யூனிட்கள், ஏற்கனவே களத்தில் உள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ராணுவ மறு வடிவமைப்பு

சமீபத்தில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவேதி, ராணுவ மறுசீரமைப்பை வகுத்திருந்தார். அதன்படி செய்யப்பட்ட மாற்றின் ஒரு பகுதிதான், 'ஷக்திபான்' படைப்பிரிவு உருவாக்கம். நவீன, தொழில்நுட்ப அடிப்படையிலான போர்களுக்குப் படையைத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த புதிய படைப்பிரிவுகள், 50 கி.மீ முதல் 500 கி.மீ வரையிலான தாக்குதல் திறன் இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஏவுகணைகள் + ட்ரோன்கள்

400-500 கி.மீ.க்கு அப்பால், ராணுவம் ஏற்கனவே பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளைப் பயன்படுத்துகிறது. மேலும், 120 கி.மீ. வரம்புடைய பினாகா பல பீப்பாய் ராக்கெட் அமைப்புகளையும் இணைத்து வருகிறது.

விரைவில் டெண்டர்

முதல் ஷக்திபான் படைப்பிரிவுகளுக்கான உபகரணங்களுக்காக, ராணுவம் விரைவில் சுமார் 850 சுழலும் வெடி பொருட்களுக்கும், அவற்றுக்கான ஏவுகணைகளுக்கும் டெண்டர் விடப்படவுள்ளது. இது விரைவு கொள்முதல் மூலம் நடைபெறும். சுமார் ₹2,000 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ், அதானி டிஃபென்ஸ், ராஃபேம் போன்ற இந்திய நிறுவனங்கள் போட்டியிட வாய்ப்புள்ளது. ஏலத்தில் வெற்றிப்பெறும் நிறுவனம், அடுத்த 2 ஆண்களுக்குள் ஆயுதங்களை விநியோகிக்க வேண்டும்.

'திவ்யஸ்திரா' பேட்டரி

இந்திய ராணுவம், 1 லட்சத்திற்கும் அதிகமான ட்ரோன் ஆபரேட்டர்களுக்குப் பயிற்சியளித்துள்ளது. மேலும், அதன் யூனிட்களுக்கு பலவகையான ட்ரோன் அடிப்படையிலான ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஷக்திபான் படைப்பிரிவுகளுடன், பீரங்கிப் படை 35 முதல் 40 'திவ்யஸ்திரா' பேட்டரிகளையும் உருவாக்கும். இவை பல தாக்குதல் ட்ரோன்களைக் கொண்டிருக்கும்.

'திவ்யஸ்திரா' பேட்டரிகள் என்றால் என்ன?

பீரங்கி படையில், 'பேட்டரி' என்பது 6-8 பீரங்கிகளை கொண்ட சிறிய பிரிவை குறிக்கும் சொல்லாகும். அந்த வகையில், 'திவ்யஸ்திரா' பேட்டரிகள் எனில், ட்ரோன்களை கையாளும் திறன் கொண்ட படைகளாகும். இந்த படை முதலில் எதிரியின் இடத்தை துல்லியமாக கண்காணிக்கும். இலக்கு குறித்த போதுமான தகவல்கள் பெறப்பட்டவுடன், தற்கொலை ட்ரோன்கள் மூலம் இலக்கை தாக்கி அழிக்கும். இதுதான் இந்த படையின் வேலை. பதுங்குக்குழிகள் போன்றவற்றை பீரங்கிகளால் தாக்க முடியாது. அதுபோன்ற இடங்களில் எதிரிகளை அழிக்க இந்த படைகள் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+