டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிதூள்.. பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு சொன்ன நிர்மலா சீதாராமன்.. இவ்வளவு குழுக்களா? சூப்பர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல சுவாரசிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் பெண்களை கவரும் வகையில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நிதியமைச்சராக பொறுப்பேற்று தொடர்ந்து அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இது. இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம்..பாராட்டும் உலக நாடுகள்..முன்னேறிய பொருளாதாரம்..நிர்மலா பெருமிதம் இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம்..பாராட்டும் உலக நாடுகள்..முன்னேறிய பொருளாதாரம்..நிர்மலா பெருமிதம்

பட்ஜெட்

பட்ஜெட்

இந்த பட்ஜெட் தாக்கலுக்கு பின் நாடாளுமன்றத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்ரித் கால் வளர்ச்சியை உருவாக்க கொண்ட நாட்டை உருவாக்குவதே நம்முடைய இலக்கு. அம்ரித் கால் வளர்ச்சியை உருவாக்க 7 வழிகளை பின்பற்ற வேண்டும்: 1. உள்ளடக்கிய வளர்ச்சி 2. எல்லோருக்குமான வளர்ச்சி 3. உள்கட்டமைப்பு & முதலீடு 4. திறனை மேம்படுத்துதல் 5. பசுமை வளர்ச்சி 6. இளைஞர் சக்தி 7. நிதித் துறை ஆகியவை மீது கவனம் செலுத்த வேண்டும். 2023ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்.

 மேஜர் அறிவிப்புகள்

மேஜர் அறிவிப்புகள்

அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு, கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு அளிக்கப்படும். மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி ஒதுக்கப்படும். இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் உருவாக்கப்படும். வேளாண் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்- வேளாண் ஊக்குவிப்பு நிதி உருவாக்கப்படும்.

பசுமை எரிசக்தி

பசுமை எரிசக்தி

விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ20 லட்சம் கோடியாக அதிகரிப்பு செய்யப்படும். பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை. ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம். 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் . குழந்தைகளுக்கான டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். பிராந்தியங்களை இணைக்க 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் ரூ5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

 பள்ளிகள்

பள்ளிகள்

740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் ரூ.2 லட்சம் கோடி செலவையும் மொத்தமாக மத்திய அரசே ஏற்கிறது: விவசாயத்துறைக்கான கடன் டார்கெட் தொகை 20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது - நிதி அமைச்சர்

 குழுக்கள்

குழுக்கள்

பிரதமர் மோடி ஆட்சியில் தனிநபர் வருமானம் ரூ1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. பெண்களை கவரும் வகையில் புதிய குழுக்கள் பற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது, 1 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ10 லட்சம் கோடி- மொத்த உற்பத்தியில் 3.3% ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும், என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
Indian Budget 2023-24: 1 lakh new woman groups will be formed says Finance minister Nirmala Sitharaman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X