சூடு பிடிக்கும் அதானி முறைகேடு புகார்.. 2 அவையிலும் எதிர்க்கட்சிகள் அமளி.. முடங்கியது நாடாளுமன்றம்!
இன்று நாடாளுமன்றத்தில் விவாதங்களுக்கு பின்னர் பிரதமர் மோடி பதில் உரை ஆற்றுவார்.
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு இன்று காலையில் தொடங்கிய சில நிமிடங்களில் முடங்கியது. இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்த நிலையில் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், இரண்டு அவையும் முடங்கியது. இதனால் இன்று நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த செவ்வாய் கிழமை குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இறுதியில் அந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் குடியரசுத் தலைவர் முர்மு உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது.
அதே நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட்
இதையடுத்து நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல முக்கிய அறிவிப்புகளை அவர் பட்ஜெட்டில் வெளியிட்டார். விவசாயிகளுக்கான அறிவிப்புகள், வருமான வரி விதிப்பு தொடங்கி வட்டி இல்லா கடன் வரை பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 3 கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும். மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ79,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்வே துறையை மேம்படுத்த ரூ2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சாலை கட்டமைப்புகளுக்கு ரூ70,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

அறிவிப்புகள்
1 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. பெண்கள் 7.5% வட்டியில் ரூ2 லட்சம் வரை சேமிக்க புதிய சேமிப்பு திட்டம் தொடங்கப்படும். கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் ரூ5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்ட பொருட்கள். அதனால் விலை உயரும் பொருட்கள்- தங்கம், வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு செய்யப்படுகிறது. வெள்ளி மீதான சுங்க வரி உயர்வு- வெள்ளி பொருட்கள் விலை உயருகிறது. சிகரெட்டுகள் விலை உயரும்- சிகரெட்டுகள் மீது கூடுதல் வரி விதிப்பு செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான இறக்குமதி வரி 16% உயர்கிறது. வருமான வரி படிவம் எளிமையாக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

வருமான வரி
அதோடு புதிய வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால்

இன்று என்ன நடக்கும்?
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு இன்று கூடியது. இன்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்தது. ஆனால் அவை தொடங்கியதும் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், இரண்டு அவையும் முடங்கியது. அதானி பங்கு சரி ஹிண்டர்ன்பெர்க் வைத்த புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் கட்சிகள் இரண்டு அவையிலும் கோஷம் எழுப்பின. இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டு இரண்டு அவைகளும் பிற்பகல் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் அவை கூடிய போதும் எதிர்க்கட்சிகள் இதே விவகாரத்தை குறிப்பிட்டு கோஷம் எழுப்பியது. இதனால் இன்று நாள் முழுக்க அவை ஒத்திவைக்கப்பட்டது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications