“செம க்ளோஸ்..” ஹர்திக் பாண்டியா என் வீட்டு சோபாவில் படுத்து.. “ஸ்டிங் ஆபரேஷனில்” உளறிய சேத்தன் சர்மா

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவின் வீட்டு சோஃபாவில் படுத்துக்கொண்டு பேசுவார் என்று அவர் கூறி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவின் வீட்டிற்கு செல்லும் ஹர்திக் பாண்டியா தன்னுடைய சோஃபாவிலேயே படுத்துக்கொண்டு பேசுவார் என்று கூறி உள்ளார். ஹர்திக் பாண்டியா இந்தியாவின் எதிர்காலம் என்றும் அவர் மிகவும் அடக்கமான வீரர் எனவும் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மொத்தமாக உலுக்கி எடுத்து இருக்கிறது, தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆபரேசனில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்த கருத்துக்கள்.

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, இந்திய அணியின் வீரர்கள் தேர்வு, ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது, கோலி - கங்குலி இடையிலான மோதல், ஊசி போட்டுக்கொண்டது என பல விசயங்களை அவர் பேசி பூதாகரத்தை கிளப்பி உள்ளார்.

ஹர்திக் பாண்டியா பற்றி பேச்சு

ஹர்திக் பாண்டியா பற்றி பேச்சு

இதில் அவர் அதிகம் பேசியது பிசிசி முன்னாள் தலைவர் கங்குலி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் குறித்துதான். அதில் ஹர்திக் பாண்டியாவுக்கும் தனக்கும் இருக்கும் நெருக்கம் குறித்த அவரது கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ரோகித், ஹர்திக்குடன் நல்ல உறவு

ரோகித், ஹர்திக்குடன் நல்ல உறவு

அவர் பேசுகையில், "ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் அடிக்கடி எனது வீட்டுக்கு வருகை தருவார்கள். அவர்களுடன் நல்ல உறவில் நான் இருந்தேன். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் எனது வீட்டுக்கு வந்த அவர்களின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றி பேசுவார்கள். ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் தங்களுக்கு சலுகை வழங்குமாறு என்னிடம் கேட்பார்கள்.

சோபாவில் படுத்த ஹர்திக் பாண்டியா

சோபாவில் படுத்த ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா என்னுடைய வீட்டுக்கு வந்து என்னுடைய சோபாவில் படுத்துக் கொண்டே பேசினார். இந்தியாவின் எதிர்காலமே ஹர்திக் பாண்டியாதான். அவர் மிகவும் அடக்கமான வீரர். சமீபத்தில் கூட அவர் என்னுடைய வீட்டிற்கு வருகை தந்தார். டி20 போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருப்பார்.

 கோலி - ரோகித் ஈகோ

கோலி - ரோகித் ஈகோ

டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்கு கேப்டன் ஆன பிறகு ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருக்க மாட்டார். விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே எந்த விதமான மோதலும் இருந்தது கிடையாது. ஆனால், அவர்களுக்கு மத்தியில் ஈகோ இருக்கும். இருவரும் மிகப்பெரும் சினிமா நட்சத்திரங்களை போன்றவர்கள்.

சேத்தன் சர்மா நீக்கம்

சேத்தன் சர்மா நீக்கம்

ஒருவர் அமிதாப் பச்சனை போன்றவர். மற்றொருவர் தர்மேந்திராவை போன்றவர்." என்றார். ஆசிய கோப்பை, 2022 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு மோசமான வீரர்கள் தேர்வே காரணம் என்று கூறப்பட்டது. இதனால் சேத்தன் சர்மா உட்பட மொத்த தேர்வுக் குழுவையுமே கடந்த ஆண்டு கலைத்தது பிசிசிஐ.

மீண்டும் நடவடிக்கையா?

மீண்டும் நடவடிக்கையா?

இந்த நிலையில், சேத்தன் சர்மா கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் அதே பொறுப்பில் சேர்க்கப்பட்டது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்த நிலையில் பிசிசிஐ, இந்திய அணி வீரர்களின் ரகசியங்களை உடைத்து சேத்தன் சர்மா பேசி இருப்பது பெரும் அதிர்வலைகளை அணி நிர்வாகத்திற்கு உள்ளேயும், ரசிகர்கள் மத்தியிலும் கிளப்பி இருக்கிறது. அவர் மீது பிசிசிஐ நடவடிக்கை எந்நேரமும் பாயலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+