குழந்தைகள் தான் குறி! சீனாவை சீரழிக்கும் எச்9என்2 சுவாச பிரச்சனை.. இந்தியாவுக்கு பரவலா? ‛அலர்ட்’
டெல்லி: சீனாவில் எச்9 என்2 எனும் சுவாச பிரச்சனை என்பது குழந்தைகளிடம் அதிகம் பரவி வருகிறது இந்நிலையில் தான் அலட்சியம் காட்டாமல் இந்தியாவில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான சீனாவில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அங்கிருந்து உலகில் பல நாடுகளுக்கும் பரவியது. இதனால் அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா உள்பட பல நாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகினர். அதோடு பலர் கொரோனா பாதித்து சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

மேலும் கொரானா வைரஸ் பாதிப்பால் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டதோடு, உலகளவில் ஒவ்வொரு நாடுகளின் பொருளாதாரமும் சரிவை சந்தித்தது. இதனால் இலங்கை, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தனர்.
இந்நிலையில் தான் தற்போது சீனாவில் புதிதாக ஒரு நோய் பரவி வருகிறது. எச்9என்2 எனும் சுவாச நோய் என்பது வடக்கு சீனாவில் வசிக்கும் மக்களை பாதித்து வருகிறது. இது நிமோனியா வகை காய்ச்சலை சார்ந்தது. குறிப்பாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இது ஒரு பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றாக பார்க்கப்படுகிறது. பிளாஸ்மா நிமோனியா என்ற சில உயிரினங்கள் ஆபத்தான பாக்டீரியாவாக இல்லாவிட்டாலும் கூட இந்த பாதிப்புக்கு அதுவே காரணம் என கூறப்படுகிறது.
தற்போது வரை இந்தியாவில் எச்9என்2 பாதிப்பு கண்டறியப்படவில்லை. இருப்பினும் சீனா அண்டை நாடு என்பதால் இந்தியா இந்த தொற்று பரவலை தடுப்பதில் அதிக கவனம் செலுத்தப்பகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், ‛‛வடக்கு சீனாவில் எச்9என்2 தொற்று மற்றும் குழந்தைகளுக்கு சுவாச நோய் பரவி வருவதை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சீனாவில் பதிவாகும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு மற்றும் சுவாச நோய்களின் பரவல் ஆகிய இரண்டில் இருந்து குறைந்தபட்ச ஆபத்து உள்ளது.
இதனால் இந்தியா எந்தவொரு பொது சுகாதார அவசர நிலைக்கும் இந்தியா தயாராக உள்ளது. இதுபோன்ற பொது சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தைப் பின்பற்ற இந்தியா தயாராகி வருகிறது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் அஜய் சுக்லா கூறுகையில், ‛‛இந்தியாவில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.இந்த வகை சுவார நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்கள் தள்ளியே நிற்க வேண்டும். அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும். மேலும் மாஸ்க் பயன்படுத்த வேண்டும். என்95 மற்றும் என்99 வகை மாஸ்க்குகளை பயன்படுத்துவது என்பது நல்லது. அதோடு வெளியே சென்று வீடு திரும்பினால் உடனடியாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.
இந்த பாதிப்பு குழந்தைகளிடம் அதிகம் உள்ளது. இதனால் குழந்தைகள் பள்ளி செல்கிறார்கள் என்றால் அதிக கவனம் எடுத்து கொள்ள வேண்டும். இருமல், சளி , காய்ச்சல் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதோடு பள்ளியில் இதுபோன்ற உடல்நல பிரச்சனைகள் வேறு யாருக்காவது இருக்கிறதா? என்று கேளுங்கள். அதோடு குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் பள்ளிக்கு தற்காலிகமாக செல்வதை நிறுத்தி மருத்துவமரை அணுகி சிகிச்சை அளியுங்கள்.
ஏனெ்றால் சீனாவை பொறுத்தமட்டில் பள்ளி குழந்தைகள் இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நோய் பாதித்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சீனாவில் உள்ள சில பள்ளிகள் அறிவுரை வழங்கி உள்ளன. இதனை உலக சுகாதார நிறுவனமும் மிகவும் முக்கிய பிரச்சனையை எடுத்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக பலர் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்துள்ளனர். இதுதான் சீனாவில் இந்த எச்9என்2 வகை வைரஸ் பாதிப்புக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் தற்போதைய சூழலில் அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் இந்த நோயின் அறிகுறி மற்றும் நோய் பாதித்தோர் இல்லை. இதனால் மக்கள் கவலைப்பட வேண்டாம். ஆனால் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்ல விஷயமாகும். முன்னதாக தினமும் 20 முதல் 30 குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்ததாகவும், தற்போது 10 முதல் 15 குழந்தைகள் வருவதால் அவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் ஆர்எம்எல் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தார். சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இல்லை, தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் தனது மருத்துவமனையில் இல்லை'' என்று கூறினார்.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர்












Click it and Unblock the Notifications