பாகிஸ்தானுக்குள்ளேயே புகுந்து தீவிரவாதிகளை கொன்று தள்ளுதாம் ‛ரா..’ இங்கிலாந்து நாளிதழ் செய்தி
புதுடெல்லி: நம் நாட்டுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் தீவிரவாதிகளை பாகிஸ்தானில் வைத்து இந்தியா கொலை செய்வதாக இங்கிலாந்து நாளிதழ் ‛தி கார்டியன்’ பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
இங்கிலாந்தில் பிரபல நாளிதழாக ‛தி கார்டியன்’ உள்ளது. இந்நிலையில் ‛தி கார்டியன்’ நம் நாட்டின் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கனடா, அமெரிக்காவை தொடர்ந்து வெளிநாடுகளில் வைத்து இந்திய உளவு அமைப்பு தீவிரவாதிகளை தீர்த்து கட்டுவதாக ‛தி கார்டியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ‛தி கார்டியன்’ வெளியிட்ட செய்தியில், ‛‛இந்தியாவுக்கு எதிரியாக அல்லது விரோதியாக கருதப்படும் நபர்களை குறிவைத்து கொல்லப்படுகின்றனர். 2019ம் ஆண்டில் இந்தியாவில் புல்வாமா தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகு இதுபோன்று 20 கொலைகளை இந்திய உளவு அமைப்பான ‛RAW’ நடத்தியதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட் மற்றும் ரஷ்யாவின் கேஜிபி ஆகியவற்றை இந்தியா உத்வேகமாக எடுத்து கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது. இதில் சில கொலைகள் குறித்த ஆவணங்களை பாகிஸ்தான் சமர்ப்பித்துள்ளது. அதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய உளவுத்துறையின் ஸ்லீப்பர் செல் மூலம் பாகிஸ்தானில் கொலைகள் நடத்தப்படுகிறது ஆனாலும் கூட அதனை சரிபார்க்க முடியாத சூழல் நிலவுகிறது’’ என குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில் தான் ‛தி கார்டியன்’ குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், ‛‛ குறிப்பிட்ட அந்த பத்திரிகையின் குற்றச்சாட்டு தவறானது. அதோடு அது இந்தியாவை எதிர்க்கும் பிரசாரம். வெளிநாடுகளில் வைத்து கொலை செய்வது என்பது இந்திய அரசின் கொள்கை அல்ல என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பலமுறை உறுதியாக கூறிவிட்டார்’’ என பதிலடி கொடுத்துள்ளது.
முன்னதாக கனடாவும், அமெரிக்காவும் இந்தியா மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இதனை இந்தியா முற்றிலுமாக மறுத்தது.
அதன்பிறகு வெளிநாட்டு குடியுரிமை பெற்ற மற்றொரு காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை இந்தியா கொல்ல கொல்லும் முயற்சியை தடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இதனையும் இந்தியா மறுத்த நிலையில் தான் இங்கிலாந்தின் ‛தி கார்டியன்’ இத்தகைய குற்றச்சாட்டை சுமர்த்தி உள்ளது. இதனையும் இந்தியா மறுத்துள்ளதோடு, ‛தி கார்டியன்’ பத்திரிகைக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications