கோலியிடம் கோபத்தில் கத்திய ஸ்கை.. சர்பராஸ் கானுக்கு வந்தால் தக்காளி சட்னியா? குடையும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய டெஸ்ட் அணியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்ட சர்பராஸ் கான் மைதானத்தில் ஆக்கிரோஷமாக நடந்துகொண்டதை பிசிசிஐ சுட்டிக்காட்டி இருக்கும் நிலையில், சூர்யகுமார் யாதவின் பழைய சம்பவத்தை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை 2 வது முறையாக இழந்தது. இதற்கு கேப்டன் ரோகித் ஷர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேர்வுக் குழு, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல், அஷ்வின் தேர்வு செய்யப்படாதது என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.

Indian fans question BCCI on Suryakumar Yadav and Sarfaraz Khan attitude

குறிப்பாக தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்தை ஆடும் அணியில் சேர்த்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரஞ்சி தொடரில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உள்நாட்டு போட்டிகளின் பேட்டிங் சராசரியில் உலகளவில் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக 2 வது இடத்தில் சர்பராஸ் கான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.

சர்பராஸ் கான் புறக்கணிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகாவது தேர்வுக்குழு நிலைபாட்டை மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் அணியிலும் சர்பராஸ் கான் பெயர் இடம்பெறவில்லை.

டெஸ்ட் தொடரான ரஞ்சியில் சிறப்பாக விளையாடி வரும் சர்பராஸ் கானை சேர்க்காமல், டி20 தொடரான ஐபிஎலில் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளித்தது சர்ச்சைக்குள்ளானது. ஏற்கனவே கேப்டன் ரோகித் சர்மா, ஷுப்மன் கில் ஆகிய 2 ஓபனர்கள் அணியில் உள்ள நிலையில், மேலும் 2 ஓபனர்களை தேர்வுக்கு தேர்வு செய்தது.

தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்தும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இஷன் கிஷானும் அணியில் உள்ளார். இவர்களை விட ரஞ்சியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கான் அணியில் இடம்பெறாதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விரக்தியில் தனது சாதனைகளை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாகவும் பதவியேற்றினார் சர்பராஸ் கான். இந்த நிலையில், இந்திய அணியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சர்பராஸ் கானை தேர்வு செய்யாததற்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அவர் வெளியிட்ட பதிவில், "கடந்த 3 ரஞ்சி தொடர்களிலும் 100 க்கும் மேல் சரசரி வைத்துள்ளார் சர்பராஸ் கான். ஒரு இளம் வீரர் இந்திய அணியில் விளையாட இந்த தகுது போதாதா? வேறு என்னதான் அவர் செய்ய வேண்டும். ஐபிஎல் விளையாடினாலே போதும், ரஞ்சியில் விளையாடுவதை தூக்கிப் போடுங்கள் என்றாவது சொல்லிவிடுங்கள்." என அவர் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த விளக்கத்தில், "சர்பராஸ் கானின் செயல்பாடுகள் மைதானத்துக்கு உள்ளேயும் வெளியிலும் சரியாக இல்லை. மைதானத்தில் அவர் ஆக்கிரோஷமாக கொண்டாடுவதை நாங்கள் பார்க்கிறோம். அவருக்கு கட்டுப்பாடு வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும். சீசனுக்கு சீசன் 900 ரன்களுக்கு மேல் எடுத்தவரை அணியில் சேர்க்க தெரியாத அளவு நாங்கள் முட்டாள் இல்லை." என்று கடுமையாக கூறி இருந்தார்.

பிசிசிஐ அதிகாரியின் இந்த விளக்கம் கடும் எதிர்ப்புகளை சந்தித்து உள்ளது. இதற்கிடையே 2020 ஆம் ஆண்டில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஐபிஎல் போட்டியின்போது மும்பை அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், பெங்களூரு அணியில் விளையாடிய அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலியிடமே ஆக்கிரோஷமாக நடந்துகொண்டார்.

இதேபோல் கவுதம் காம்பீர், விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், ஆவேஷ் கான், ஸ்ரீசாந்த் என இந்திய அணியில் விளையாடிய பல வீரர்கள் மைதானத்தில் ஆவேகமாக நடந்து இருக்கிறார்கள். ஆனால், சர்பராஸ் கானுக்கு மட்டும் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+