பறந்து வந்த சீன ஹெலிகாப்டர்.. விரைந்து சென்ற இந்திய போர் விமானங்கள்.. லடாக் எல்லையில் நடப்பது என்ன?
டெல்லி: லடாக் எல்லையில், சீனா அத்துமீறியதால், இந்திய விமானப் படையின் அதி நவீன விமானங்கள், எல்லையில் சீறிப் பாய்ந்தன. இது அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது ரோந்து பணிதான் என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video
கொரோனா பிரச்சினையுள்ள இந்த காலகட்டத்தில் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா முயன்று வருகிறது. இதனால், இந்தியா மீது சீனா கோபம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், லடாக் எல்லையில் இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே திடீர் சண்டை வெடித்தது. எல்லை பகுதியில் இருக்கும் பிங்கர் 5 என்ற பகுதியில் இரண்டு நாட்கள் முன் நள்ளிரவில் மோதல் நடந்துள்ளது.

கற்கள், கம்பிகள்
முதலில், வாக்குவாதமாகத்தான் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. பிறகு கற்கள், இரும்பு கம்பிகளை வீசி சண்டையிட்டுள்ளனர். இதில் யாரும் பெரிதாக காயமடையவில்லை. இந்த தகவல் பின்னர் வெளியானது. எவரெஸ்ட் சிகரத்தை மொத்தமாக கைப்பற்றும் வகையில் சீனா முயல்கிறது. ஆனால் சமீபத்தில், எவரெஸ்ட் மேப்பை மாற்றி சீனா வெளியிட்டிருந்தது.

ராணுவ ஹெலிகாப்டர்கள்
இந்த நிலையில்தான். லடாக் யூனியன் பிரதேசத்தின், பிங்கர் 1 என்ற எல்லை பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய ஆரம்பித்தது. அப்போது இந்திய ராணுவத்தினர் வழி மறித்து, சண்டையில் ஈடுபட்டனர். அப்போது, மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பாங்காங் த்சோ செக்டாரில் இரு சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் பறந்து வட்டமடித்தன. இதனால், இந்திய ராணுவம் கோபமடைந்தது.

விரைந்த போர் விமானங்கள்
தகவல் அறிந்ததும், நமது விமானப்படையின் இரண்டு சுகோய் -30 எம்.கே.ஐ ஜெட் விமானங்கள் அங்கு விரைந்தன. ஸ்ரீநகர் பகுதியிலிருந்து மிக்-29எஸ் மற்றும் ஜாக்குவார் ரக போர் விமானங்களும் லடாக் எல்லைக்கு பறந்தன. அங்கு அவை வட்டமிட்டு எதிரிகளுக்கு நமது பலத்தை பறைசாற்றின.
இதுகுறித்து, இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், பதற்றத்தை ஏற்படுத்துவது நமது நோக்கமில்லை, இது வழக்கமான ரோந்துப் பணிதான், என கூறியுள்ளது.

துப்பாக்கி போதும்
சீன ஹெலிகாப்டர்களை தடுத்து நிறுத்தவோ அல்லது பயமுறுத்தவோ நமது போர் விமானங்கள் லடாக் வரவில்லை. தரைப் பகுதியை கண்காணிக்கத்தான் நமது விமானங்கள் அங்கே பறக்கின்றன என்று ராணுவம் தெரிவிக்கிறது. இதுகுறித்து ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், சீன ஹெலிகாப்டர்கள் அத்துமீறினால், அதை சுட்டு வீழ்த்த, வான் பாதுகாப்பு துப்பாக்கிகளே போதும். அதி நவீன போர் விமானங்கள் தேவையில்லை. ஆனால், நமது பலத்தை சீனாவுக்கு காண்பித்து எதிரி ராணுவத்தின் மனபலத்தை குலைப்பதுதான், நமது போர் விமானங்கள் அங்கே சீறிப் பாய்ந்ததன் நோக்கம் என்கின்றன ராணுவ வட்டாரங்கள்.
-
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications