ஆரோக்யா சேது ஆப்: கொரோனாவிடம் இருந்து உங்களை காக்கும் ஆப்.. பிரதமர் மோடியின் ஸ்பெஷல் கோரிக்கை!
டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை சார்பாக ஆரோக்யா சேது (Aarogya Setu) என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது. "ஆரோக்கியா சேது" மொபைல் செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார் .
Recommended Video
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இன்றோடு முடிய வேண்டிய ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இன்று மக்கள் முன் பேசிய பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார். இந்தியா முழுக்க மொத்தம் 10500 பேர் வரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தற்போது கொரோனாவிற்கு எதிராக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.இன்னொரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கு தற்போது மத்திய அரசு தொழில்நுட்பத்தின் உதவியை நாடி உள்ளது. ஆம், இதற்காக மத்திய அரசு ஆரோக்யாசேது (AarogyaSetu) என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப துறை மூலம் இதற்கு ஆரோக்யாசேது (AarogyaSetu) என்ற செயலி வெளியிடப்பட்டுள்ளது. ஆரோக்யா சேது (Aarogya Setu) ஆப் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது.
இது கொரோனாவில் இருந்து உங்களை காக்க உதவும். ஆம் இந்த ஆப் உதவியுடன் நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எளிதாக கொரோனா தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள முடியும். இது ஏஐ மூலம் செயல்பட கூடிய ஆப் ஆகும்.
உங்கள் ஜிபிஎஸ் லொகேஷன், ப்ளூடூத், வைஃபை ஆகியவற்றின் மூலம் இது உங்கள் இருப்பிடத்தை வைத்து உங்களை எச்சரிக்கும். நீங்கள் இருக்கும் இடம், உங்களுக்கு அருகே இருக்கும் நபர்கள் மூலம் உங்களுக்கு எந்த அளவிற்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பதை வைத்து இந்த ஆப் செயல்படும். இதை இந்த ஆப் கணித்து உங்களை எச்சரிக்கும். அதேபோல் அரசுக்கும் உடனுக்குடன் இது கொரோனா குறித்த தகவல்களை தெரிவிக்கும்
இது மிக துல்லியமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதில் உங்களுக்கு கொரோனா குறித்த அறிகுறிகள், முக்கியமான அறிவிப்புகள், செய்திகள் கூட கிடைக்கும். வரும் நாட்களில் இந்த ஆப்பை மத்திய அரசு இ - பாஸ் போல பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இந்த ஆரோக்யா சேது ஆப் இந்தியாவில் மொத்தம் 11 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது.
உங்களுக்கு கொரோனா ஏற்பட்டால் அல்லது கொரோனா அறிகுறி இருந்தால் இதில் நீங்கள் தகவலை தெரிவிக்கலாம். அதன்மூலம் உங்களுக்கு அருகே உள்ளவர்களை இந்த ஆப் மொத்தமாக எச்சரிக்கை செய்யும். இப்படி பலரின் டேட்டாக்களை திரட்டி இந்த ஆப் மக்களுக்கு உதவும். இன்று மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி "ஆரோக்கிய சேது" மொபைல் செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் .
ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் இயங்கு தளத்தில் இது இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications