Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கே பார்த்தாலும் காய்ச்சல், சளி, ஆனா ஆன்டிபயாட்டிக் எடுத்துறாதீங்க: இந்திய மருத்துவ சங்கம் கருத்து

இந்தியாவில் தற்போது பருவகால காய்ச்சல் (Seasonal fever) பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் தற்போது பருவகால காய்ச்சல் (Seasonal Flu or Seasonal Fever) வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு பொதுமக்களுக்கும், டாக்டர்களுக்கும் ஆன்டிபயாடிக்ஸ் பயன்படுத்த வேண்டாம் என்ற முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளது.

தற்போது நாடு முழுவதும் சீசன் காய்ச்சல் பரவி வருகிறது. பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த காய்ச்சலால் முதியவர்கள், சிறுவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

பலருக்கும் காய்ச்சல் குணமானாலும் கூட அதற்கு பிறகு சில நாட்களும் தொடர் இருமல், சளி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது

 இந்திய மருத்துவ கூட்டமைப்பு அட்வைஸ்

இந்திய மருத்துவ கூட்டமைப்பு அட்வைஸ்

இதனால் மக்கள் அனைவரும் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி நிர்வாகங்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தான் இந்தியாவில் பரவும் சீசன் காய்ச்சல் பரவலை இந்திய மருத்து கூட்டமைப்பு கூர்ந்து கவனித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக அந்த கூட்டமைப்பின் நிலைக்குழு சார்பில் தற்போது முக்கிய அட்வைஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

எச்3என்2 வைரஸ் பாதிப்பு

எச்3என்2 வைரஸ் பாதிப்பு

நாட்டில் தற்போது நிறையபேர் பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் எச்3என்2 (H3N2) வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இருமல், குமட்டல், வாந்தி, தொண்டை வறட்சி, காய்ச்சல், உடல் வலி, டயரியா உள்ளிட்டவற்றால் நிறையபேர் பாதிக்கப்படலாம். இந்த சீசன் காய்ச்சல் 5 முதல் 7 நாட்கள் வரை இருக்கும். இருப்பினும் காய்ச்சல் என்பது 3 நாளில் குணமாகும்.

ஆண்டிபயாடிக்ஸ் வேண்டாம்

ஆண்டிபயாடிக்ஸ் வேண்டாம்

இருப்பினும் இருமல், சளி உள்ளிட்ட தொல்லைகள் 3 வாரம் வரை நீடிக்கலாம். பொதுவாக இந்த பருவகால காய்ச்சலால் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயதுக்கு குறைவானவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சுவாச பிரச்சனையை சந்திக்கலாம். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்பது காற்று மாசாகும். எனவே, பருவகால சளி காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்ளக்கூடாது.

சுயக்கட்டுப்பாடு போதும்

சுயக்கட்டுப்பாடு போதும்

நோயாளிகள் Azithromycin and Amoxiclav உள்ளிட்டவற்றை எடுத்து கொள்ள வேண்டாம். இவை தவறாக பயன்படுத்தப்படுகின்றனர். இதுதுவிர பல ஆன்டிபயாட்டிக்ஸ் நோயாளிகளிடம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதிகமாக தவறாக பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக்ஸ் என்பது amoxicillin, norfloxacin, oprofloxacin, ofloxacin, levofloxacin போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மக்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதன்மூலம் நோய் தொற்று பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கை, கால்களை நன்கு கழுவுவதோடு, வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+