Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாலா பக்கமும் கடற்கொள்ளையர்கள்.. கதறி துடித்த பாகிஸ்தானியர்கள்.. தக்க நேரத்தில் உதவிய இந்திய கடற்படை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரபிக் கடல் பகுதியில் மீன்பிடி கப்பல் ஒன்று கடத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு தக்க நேரத்தில் உதவிய இந்தியக் கடற்படை உள்ளே இருந்த பாகிஸ்தான் நாட்டினரைப் பத்திரமாக மீட்டனர்.

சர்வதேச அளவில் எப்போதும் கடல் வணிகம் ரொம்பவே முக்கியமானது. உலகில் நடக்கும் சுமார் 90% சரக்கு போக்குவரத்து கடலை சார்ந்தே நடப்பதால் இது ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

Indian Navy Rescues Iranian Fishing Vessel Attacked By Pirates and safeguarded 23 Pakistan Nationals

இருப்பினும், இப்போது மத்திய தரைக்கடல், அதை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கே கப்பல்கள் கடத்தப்படும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளன.

கடத்தல்: அதன்படி மற்றொரு சம்பவம் அரபிக்கடல் பகுதியில் நடந்துள்ளது. அங்கே ஈரான் நாட்டுக் கொடியுடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்றைக் கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். அந்த கப்பலில் இருந்து எஸ்ஓஎஸ் மெசேஜ் வந்த நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்த இந்தியக் கடற்படை அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது.

கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு அந்த கப்பலும் உள்ளே இருந்த 23 ஊழியர்களும் மீட்கப்பட்டனர். கப்பலில் மீட்கப்பட்ட அந்த 23 பேரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மீட்பு: இது தொடர்பாக இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மார்ச் 28ஆம் தேதி மாலை ஈரான் நாட்டை சேர்ந்த மீன்பிடிக் கப்பலான 'அல்-கம்பார் 786'ஐ கடற்கொள்ளையர்கள் கடத்தியதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடல்சார் பாதுகாப்பிற்கு அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த இரண்டு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் உடனடியாக இதில் தலையிட அனுப்பப்பட்டன.

சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டித்த கடற்படை நடவடிக்கைக்குப் பிறகு கடத்தப்பட்ட கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் சரணடைந்தனர். உள்ளே கப்பலில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 23 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடற்கொள்ளையர்கள் சரணடைந்த பிறகு கப்பலுக்குள் நுழைந்த இந்தியக் கடற்படை கப்பலை முழுமையாகச் சோதனை செய்தது. கப்பலில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்பதை இந்தியக் கடற்படை உறுதி செய்தது. மேலும் பாதுகாப்பிற்கு சில கடல் மைல்கள் உடன் சென்றதாகத் தெரிகிறது.

Indian Navy Rescues Iranian Fishing Vessel Attacked By Pirates and safeguarded 23 Pakistan Nationals

என்ன நடந்தது: மார்ச் 28ஆம் தேதி மீன்பிடி படகு கடத்தப்பட்ட நிலையில், இது குறித்த எஸ்ஓஎஸ் தகவல் கிடைத்த உடன் நேற்று மார்ச் 29ஆம் தேதி அதிகாலையில் ஐஎன்எஸ் சுமேதா மற்றும் ஏவுகணை போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிசூல் அங்கே உதவிக்கு விரைந்தன. இந்தியப் பெருங்கடலில் உள்ள ஏமன் தீவான சொகோட்ராவிலிருந்து தென்மேற்கே சுமார் 90 கடல் மைல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த மீன்பிடி கப்பலில் மொத்தம் 9 ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் ஏறியதாகக் கூறப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் பகுதிகளில் சிக்கலில் மாட்டும் கப்பல்கள் அல்லது படகுகளுக்கு இந்தியக் கடற்படை உதவுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களிலும் பல முறை இதுபோன்ற பல துணிச்சலான நடவடிக்கையை இந்தியக் கடற்படை மேற்கொண்டு இருக்கிறது. முன்னதாக இம்மாத தொடக்கத்தில் இந்தியக் கடற்கரையில் இருந்து சுமார் 2,600 கிமீ தொலைவில் பயணித்த ருயென் என்ற கப்பலைக் கடற்கொள்ளையர்கள் தாக்கிய போதும் துணிச்சலாக அவர்களைக் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.

அந்த மீட்பு ஆப்ரேஷன் சுமார் 40 மணி நேர வரை நீட்டித்தது. மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலில் ஏறி இருந்த 35 கடற்கொள்ளையர்களையும் வெற்றிகரமாகச் சரணடைய வைத்தது. கப்பலில் இருந்து 17 பணியாளர்களை எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+