வாக்கு தவறிய ரஷ்யா.. பெட்ரோலுக்காக அரபு நாடுகளை நாட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்!
டெல்லி: இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை சப்ளை செய்து வந்தது. தற்போது இந்த சப்ளை குறைந்துள்ளதால் மீண்டும், எண்ணெய் கொள்முதலுக்கு அரபு நாடுகள் பக்கம் செல்ல இந்திய எண்ணெய் நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.
அரபு நாடுகளில் எண்ணெய் வளம் அதிகமாக இருக்கிறது. ஆனால் அங்கிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் தூரம்தான். ஈராக், சவுதி அரேபியா மற்றும் யுனைட்டட் அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலிலிருந்துதான் இந்தியா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இந்த நாடுகள் அனைத்தும் குறைந்தபட்சம் 2000 முதல் அதிகபட்சம் 3000 கி.மீ வரை தூரம் இருக்கிறது. எனவே அங்கிருந்து எண்ணெய்யை கொண்டுவருவது சிக்கலானதாக உள்ளது.

இரண்டாவது பிரச்சனை பணப்பரிமாற்றம். அதாவது அரபு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கும்போது அவர்களுக்கு அமெரிக்க டாலரில்தான் பணம் கொடுக்க வேண்டும். எனவே இந்தியா கணிசமான அளவுக்கு டாலர் இருப்பை வைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் பார்த்த இந்திய எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை ரஷ்யா பக்கம் தாவின. ரஷ்யா அரபு நாடுகளை விட தூரமாக இருந்தாலும் அங்கு இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்யலாம். இது எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் தரக்கூடிய விஷயம்.
குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கியதால், அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்திருந்தது. எனவே ரஷ்யா எண்ணெய் விற்பனையை அதிகரித்து இந்த தடையை சரி செய்ய திட்டமிட்டது. இந்த புள்ளியில்தான் இந்திய எண்ணெய் நிறுவனங்களும், ரஷ்யாவும் கரம் கோர்த்தன. அதிக அளவில் இறக்குமதியை எண்ணெய் நிறுவனங்கள் செய்தன. விலையும் குறைவு, சொந்த கரன்சியில் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்கிறபோது வர்த்தகம் அதிகரித்தது.
ஆனால் எல்லா விஷயங்களுமே ஒரு புள்ளியில் உச்சத்தை தொட்டு பின்னர் சரிய தொடங்கும். அதேபோல தற்போது ரஷ்யா உடனான எண்ணெய் வர்த்தகமும் சரிய தொடங்கியுள்ளது. அதாவது தேவைக்கு ஏற்ப ரஷ்யா எண்ணெய்யை வழங்குவதில்லை என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த நவம்பர் முதல் கச்சா எண்ணெய் சப்ளையில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று அந்நிறுவனங்கள் கூறியுள்ளன. மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கும் ஜனவரிக்கு வழங்க வேண்டிய சப்ளையில் சுமார் 8-10 மில்லியன் பீப்பாய்கள் பற்றாகுறையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா உக்ரைனுடன் தீவிரமாக போர் செய்து வருவதால் அந்நாட்டுக்கு பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை அதிகரித்திருக்கிறது. எனவே, சொந்த நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் விநியோகத்தை ரஷ்யா கடடுக்குள் கொண்டுவந்திருக்கிறது. ஆகவே வேறு வழியின்றி மீண்டும் அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இந்த கொள்முதல் தொடங்கும் என்றும், ஒரு சில மாதங்களில் பழைய மாதிரியான கொள்முதல் முறைக்கு இந்தியா திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications