கோவிஷீல்டு போட்டதால் 29 வயது இளம்பெண் மரணம்.. இந்தியாவிலும் எழுந்த பரபர புகார்! பின்னணி என்ன
டெல்லி: கோவிஷீல்டு வேக்சின் போட்டுக் கொண்ட தங்கள் மகள் உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டும் இந்திய பெற்றோர் ஒருவர், இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி குறித்து வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வேக்சின்: பிரிட்டனின் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்ட மிக சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படும் என்று பிரிட்டன் நீதிமன்றத்தில் அந்த நிறுவனமே ஒப்புக் கொண்டதே இந்த பரபரப்புக்கு காரணமாகும். இதற்கிடையே இந்தியாவிலும் கோவிஷீல்டு வேக்சினால் மரணங்கள் நடந்துள்ளதாக குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன
அதாவது தங்கள் மகள் கோவிஷீல்டு வேக்சின் எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக இளம்பெண் ஒருவரின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்த பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மீது அவர்கள் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தங்கள் வேக்சினால் மிக மிக அரிதாகச் சிலருக்கு ரத்த உறைவு மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவு ஆகிய பாதிப்பு ஏற்படுவதாகச் சமீபத்தில் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வேக்சினை இந்தியாவில் உற்பத்தி செய்த சீரம் நிறுவனம் இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
குற்றச்சாட்டு: கடந்த 2021இல் தனது 20 வயது மகள் காருண்யா வேக்சின் போட்டுக் கொண்டதால் உயிரிழந்ததாக வேணுகோபாலன் கோவிந்தன் என்பவர் குற்றஞ்சாட்டி இருந்தார்.. அதேநேரம் தனது வேக்சினால் பக்க விளைவுகள் ஏற்படுவதை மிக தாமதமாகவும் இவ்வளவு உயிர்களை இழந்த பிறகு அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது சரியான நடைமுறை இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
நீதி வேண்டும்: ரத்த உறைதல் பிரச்சினையால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக 15 ஐரோப்பிய நாடுகள் அதற்குக் கட்டுப்பாடுகளை விதித்த போதே வேக்சின் சப்ளையை சீரம் நிறுவனம் நிறுத்தியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வேக்சினால் அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள் நீதிக்காக பல்வேறு நீதிமன்றங்களில் போராடி வருவதாகவும் இருப்பினும், எங்கும் வழக்கை விசாரணைக்குக் கூட எடுப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பொது சுகாதாரம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த அட்டூழியம் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்காமல் போனால் குற்றவாளிகள் அனைவருக்கும் எதிராக புதிய வழக்குகளைப் பதிவு செய்வோம். இதுவரை பாதிக்கப்பட்ட எட்டு குடும்பங்கள் என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் சார்பாகவே நான் இதைக் கூறியுள்ளேன்.
பாவங்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்: இந்தியாவின் சீரம் நிறுவனம் மற்றும் ஆதார் பூனாவல்லா ஆகியோர் தங்கள் பாவங்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். இழந்த உயிர்களுக்கு அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்" என்று விமர்சித்துள்ளார். மேலும், தடுப்பூசியை அவசர அவசரமாக வெளியிட ஒப்புதல் அளித்தது அரசின் தவறு என்றும் அவர் விமர்சித்துள்ளார்..
பின்னணி என்ன: கடந்த 2021ஆம் ஆண்டு தனது 18 வயது மகள் உயிரிழந்ததாக இவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தங்களது மகளின் மரணத்திற்கு இழப்பீடு கோரிய அவர், வேக்சின் குறித்து விசாரணை நடத்த மருத்துவக் குழுவை அமைக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications