டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரியும் வளர்ச்சி! 2024ல் ஜிடிபி 6-6.8% ஆக இருக்கும்! நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை

022-23 நிதி ஆண்டு எப்படி இருந்தது, வரும் நிதி ஆண்டு எப்படி இருக்கும் என்பது தொடர்பான தெளிவான பார்வை இந்த அறிக்கை மூலம் நமக்கு தெரிய வரும்.

Google Oneindia Tamil News

டெல்லி: நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

2023ம் ஆண்டின் வளர்ச்சி, பொருளாதார ரீதியாக ஏற்பட்ட சிக்கல், முதலீடுகள் கடன், ஏற்றுமதி, இறக்குமதி வருவாய் போன்றவை தொடர்பான விவரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும். இந்த ஆய்வறிக்கை நிதி துறையின் பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவு சார்பாக உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தலைமை பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் மேற்பார்வையில் இந்த அறிக்கை தயார் ஆகி உள்ளது.

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! குடியரசுத் தலைவர் முர்மு உரை நிகழ்த்துகிறார்! இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! குடியரசுத் தலைவர் முர்மு உரை நிகழ்த்துகிறார்!

பொருளாதாரம்

பொருளாதாரம்

2022-23 நிதி ஆண்டு எப்படி இருந்தது, வரும் நிதி ஆண்டு எப்படி இருக்கும் என்பது தொடர்பான தெளிவான பார்வை இந்த அறிக்கை மூலம் தெரிய வரும். அதேபோல் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் எப்படி இருக்கும் என்பது தொடர்பான பார்வையையும் இந்த அறிக்கை நமக்கு வழங்கும். 1950-51ம் ஆண்டுகளில் இருந்து இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆய்வறிக்கை ஒரு தலைப்பிற்கு கீழ் தாக்கல் செய்யப்படும். நாட்டின் பொருளாதாரம் குறித்த தெளிவான பார்வை நமக்கு இந்த அறிக்கை மூலம் கிடைக்கும். வரும் காலங்களில் நாட்டின் பொருளாதாரம் உயருமா, சரியுமா என்பதும் இதன் மூலம் தெரிய வரும்.

அறிக்கை

அறிக்கை

வரி கட்டுப்பாடு, வருமான வரி குறைப்பு, சாமானியர்களுக்கு சாதகமாக சில அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இதில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 2023- 2024ல் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது நடக்கும் 2022-2023 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7 ஆக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அடுத்த நிதி ஆண்டில் இது 6-6.8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

என்னென்ன துறைகள்

என்னென்ன துறைகள்

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள் பின்வருமாறு, சாலை போக்குவரத்து துறை: ஏப்ரல் - நவம்பர் நிதி ஆண்டு 2023ல் 1.49 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ துறை: செப். 2022 வரை மருத்துவ துறையில் அந்நிய முதலீட்டு 20 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது . கடந்த 5 வருடங்களில் மருத்துவ துறையில் அந்நிய முதலீட்டு 5 மடங்கு உயர்ந்து உள்ளது . 2023ல் ஜிடிபி உயர அதிக மூலதனச் செலவு முக்கிய காரணமாக இருக்கும்.

சிறு வணிகங்களுக்கான கடன்

சிறு வணிகங்களுக்கான கடன்

சிறு வணிகங்களுக்கான கடன் வளர்ச்சி, வெளிமாநில பணியாளர்கள் பணிக்கு திரும்புவதும் இதற்கு காரணமாக இருக்கும் . ஆற்றல் மற்றும் எரிசக்தி துறையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வழிநடத்தும். மருத்துவ துறை: கடந்த 4 வருடங்களாக மருத்துவ துறைக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. மாநில - மத்திய பட்ஜெட்டில் 2023 நிதி ஆண்டில் மருத்துவத்துறைக்காக 2.1% ஒதுக்கப்பட்டது என்று கூறப்பட்டு உள்ளது.

English summary
Indian Parliament Budget Session: Finance Minister Nirmala Sitharaman to release Economic Survey report today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X