திடீரென மாயமான ரயில் பெட்டி.. குழம்பி போன பயணிகள்.. பரிதவித்த டிக்கெட் பரிசோதகர்.. என்ன நடந்தது!
டெல்லி: பொதுவாகவே நம்மில் பலருக்கும் மேஜிக் பிடிக்கும். மேஜிக் வித்தையில் நமது கண் முன்னாடியே இருக்கும் ஒரு பொருளை மறைய வைத்து மேஜிக் செய்வார்கள். ஆனால், ஒட்டுமொத்த ரயில் பெட்டியும் மாயமாகிப் போய் நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. ஆனால், இது மேஜிக் இல்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து முறையாக ரயில்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பல கோடி பேர் ரயில்களைப் பயன்படுத்துகிறார்கள். அதேநேரம் ரயில் பயணங்களில் எப்போதும் பல வினோதச் சம்பவங்கள் நடக்கும். அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. எந்தவொரு மேஜிக்கும் இல்லாமல் ஒடிசாவின் மேற்குப் பகுதியில் ரயில் பெட்டி ஒன்று அப்படியே மாயமாகியுள்ளது.

ரயில்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தின் பர்த்வான் நகரில், பி.சி. சர்க்கார் ஜூனியர் என்ற மந்திரவாதி, ஒரு பயணிகள் ரயிலையே அப்படியே மொத்தமாக மாயமாக்கிக் காட்டினார். இதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் மிரண்டு போனார்கள். அதை விடப் பயணிகள் கலங்கடித்த சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. ஆனால், இது மேஜிக் எல்லாம் இல்லை.
மாயம்
அங்கு ரயில் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒட்டுமொத்தப் பெட்டியும் காணாமல் போயிருந்தது. சம்பல்பூர்- நாந்தெட் நாகாவலி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20809) ஞாயிற்றுக்கிழமை காலை சம்பல்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது சில பயணிகளுக்கு ரொம்ப ஷாக். ஏசி வகுப்பில் முதலாம் நம்பர் பெட்டி இருக்கிறது. அதைத் தாண்டிப் போனால் 3ம் நம்பர் பெட்டி இருந்துள்ளது. ஆனால், 2ம் நம்பர் பெட்டி (BE2) மட்டும் காணவில்லை.
இதனால் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு டிக்கெட் வைத்திருந்தோர் எங்கு ஏறுவது எனத் தெரியாமல் குழம்பியுள்ளனர். அங்கும் இங்கும் பணிகள் அலைமோதினர். முதலில் பயணிகள் யாரைக் கேட்பது எனப் புரியாமல் குழம்பி இருந்தனர். பிறகு, உள்ளே ஏறிய பிறகு பேசிக் கொள்ளலாம் என அவர்கள் ரயில் ஏதோ ஒரு பெட்டியில் ஏறினர். அதன் பிறகு டிடிஆரிடம் இது குறித்துக் கேட்டு பிரச்சினை செய்யவே, அவரும் இது எப்படிச் சாத்தியம் எனக் குழம்பிப் போனார்.
சிக்கல் என்ன
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 320 கி.மீ. மேற்கே உள்ள சம்பல்பூரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எந்தவொரு மேஜிக்கும் இல்லாமல் ரயில்வே துறையில் நடந்த குளறுபடியால் ஒட்டுமொத்த ஏசி பெட்டியும் மாயமாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் ரயில் அந்த குறிப்பிட்ட பெட்டி இல்லாமலேயே மேற்கு வங்கத்தின் சம்பல்பூரில் இருந்து புறப்பட்டது தெரிய வந்தது.
புலம்பல்
இந்தக் குழப்பத்தால் சில பயணிகள் ரயிலில் ஏறாமலேயே விட்டுவிட்டனர். வேறு சிலர் கிடைத்த பெட்டியில் ஏறிக்கொண்டனர். கன்பார்ம் டிக்கெட் வைத்திருந்த சுமார் 30+ பயணிகள், ரயிலின் வெவ்வேறு பெட்டிகளில் ஏறிப் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெட்டியை இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் இதற்குக் காரணம் என்று கிழக்குக் கடற்கரை ரயில்வே விளக்கமளித்தது.
விசாகப்பட்டினம் ஜங்ஷனை ரயில் அடைந்ததும், ஒரு புதிய ஏ.சி. பெட்டி இணைக்கப்பட்டு, இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது. இருப்பினும், இது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருள் ஆகியுள்ளது. இந்தச் சிக்கல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications