கிரீன் சிக்னலுக்காக வெயிட்டிங்.. ஓடப்போகும் அதிக ரயில்கள்.. ரயில்வே அதிகாரி சொன்ன குட் நியூஸ்!.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அன்லாக் 4.0 இந்தியாவில் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இனி அதிக பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்காக மாநில அரசுகளுடனான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் ரயில்கள் விரைவில் ஓடத்தொடங்கும் என்றார்.

இந்திய ரயில்வே நாள்தோறும் சுமார் 13,500 பயணிகள் ரயில்களை இயக்கிய வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மார்ச் மாதத்தில் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஆனால் ஊரடங்கால் வேலை இழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வறுமையின் கோரப்பிடியால், அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத நிலைக்கு சென்றதால், உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து நடந்தே சொந்த ஊர்களுக்கும், சொந்த மாநிலங்களுக்கும் சென்றனர். இப்படி நடந்த சென்றவர்கள் விபத்தில் சிக்சி இறந்த சம்பவங்களும் நடந்தன.பசியோடும் காலில் செருப்புக்கூட இல்லாமல் பிஞ்சு குழந்தைகள் நடந்து சென்ற சம்பங்கள் நாட்டை உலுக்கின.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

சிறப்பு ரயில்கள் இயக்கம்

இதையடுத்து மத்திய அரசு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல சிறப்பு ரயில்களை அறிவித்தது. இதன்படி மே மாதத்தில் 30 ராஜதானி ரயில்களும், ஜூன் 1 ம் தேதி முதல் 200 ரயில்களும் இயக்கத் தொடங்கின. இது போன்று 4,000 ரயில்கள் இயங்க தொடங்கின.

மாநிலங்கள் கோரிக்கை

மாநிலங்கள் கோரிக்கை

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஜூலை மாதத்தில் மீண்டும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பயணிகள் ரயில் சேவையை நிறுத்தும்படி மாநில அரசுகள் வைத்த கோரிக்கையை ஏற்று நிறுத்தப்பட்டது. எனினும் சரக்கு ரயில்கள் தொடர்ந்து நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன.

அதிக பயணிகள் ரயில்

அதிக பயணிகள் ரயில்

இந்நிலையில் மத்திய அரசு அன்லாக் 4.0ஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொருளதாரத்தை ஊக்குவிப்பதற்காக இபாஸ் முறைக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து இனி அதிக பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருவதாவும், மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்படுவதாகவும் ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கிரீன் சிக்னால் கிடைத்தால்

கிரீன் சிக்னால் கிடைத்தால்

"உள்துறை அமைச்சகத்திடமிருந்து கிரீன் சிக்னல்கள் மற்றும் அனுமதி கிடைத்தவுடன், எத்தனை ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிப்போம், ஆனால் அதிகமான ரயில்கள் நிச்சயமாக இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் "அனைத்து ரயில்களும் ஒரே நேரத்தில் தொடங்கப்படாது" என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

மாநில அரசின் நிபந்தனை

மாநில அரசின் நிபந்தனை

இதற்கான இறுதி முடிவு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இருக்கும் என்றும் . மாநில அரசுகள் முன்வைத்துள்ள நிபந்தனைகளைப் பொறுத்து ரயில்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் மூத்த ரயில்வே அதிகாரி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+