ரயில் பயணம் மொத்தமாக மாற போகுது! சீக்கிரமே வருது 200 வந்தே பாரத் ஸ்லீப்பர்.. எந்த ரூட்கள் தெரியுமா?
டெல்லி: நமது நாட்டில் வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இதற்கிடையே அடுத்த கட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது. நீண்ட தூரப் பயணங்களை மொத்தமாக மாற்றி அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் இப்போது இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் விரிவான கட்டமைப்பைக் கொண்ட ஒன்றாக ரயில்வே இருக்கிறது. கிட்டதட்ட எல்லா முக்கிய நகரங்களுக்கும் ரயில் சேவை இருக்கும் வகையிலேயே ரயில்வே நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத்:
இருப்பினும், ரயில்வே துறையில் புதுமைகள் எதுவும் இல்லை என்ற விமர்சனம் மட்டுமே தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே துறை வந்தே பாரத் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்தியது. இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை மெல்ல அதிகரிக்கப்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ரயில்களைப் பொறுத்தவரை அதன் வேகம், நேரம் தவறாமை, அதிநவீன வசதிகள் ஆகியவற்றுக்கு பெயர்போனதாக இருக்கிறது. ஆனால், அதில் உட்கார்ந்து மட்டுமே போக முடியும் என்பதால் அது குறுகிய மற்றும் நடுத்தர தூரப் பயணங்களுக்கு மட்டுமே ஏற்றதாக இருக்கிறது. வந்தே பாரத் ரயில்களில் பயண நேரம் கணிசமாகவே குறைகிறது.
வெகுவாக குறைகிறது
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் சென்னையில் இருந்து கோவை செல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். ஓவர் நைட் பயணிக்கும் ரயில் என்றால் கிட்டதட்ட 9 மணி நேரம் ஆகும். அதேநேரம் பகல் நேரத்தில் பயணிக்கும் ரயில் என்றால் வெறும் 6 மணி நேரத்தில் நம்மால் சென்றுவிட முடியும். இந்தளவுக்குப் பயண நேரத்தைக் குறைத்து, சொகுசு வசதிகளைத் தருவதாலேயே மக்கள் பலரும் வந்தே பாரத்தை விரும்புகிறார்கள். வந்தே பாரத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இப்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலைக் கொண்டு வருவதில் ரயில்வே துறை தீவிரமாக இருக்கிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் சிறப்புகள்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்தே பாரத் ஸ்லீப்பரின் ப்ரோடோடைப் வெளியானது. அதில் விசாலமான ஸ்லீப்பர் பெட்கள், தனிப்பட்ட சார்ஜிங் பாயிண்ட், விளக்குகள், மாடர்ன் உட்புறம் ஆகியவை உள்ளன. மேலும், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய அதிநவீன சிக்னலிங் மற்றும் பிரேக்கிங் அமைப்புகளையும் கொண்டு இருக்கிறது. முதற்கட்டமாக நாடு முழுவதும் அதிக தேவை இருக்கும் நீண்ட தூர வழித்தடங்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி முக்கிய நகரங்கள் மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் வகையிலான ரூட்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. சொகுசு வசதிகளை வழங்குவதன் மூலம் விமான பயணங்களுக்கு அது மாற்றாக இருக்கலாம். இது மிகப் பெரிய லட்சிய திட்டமாக இருந்தாலும், இதை நாடு முழுக்க செயல்படுத்துவதில் பல்வேறு சவால்கள் உள்ளன. ஆனாலும், கடந்த காலங்களைப் போலவே இந்த தடைகளைத் தகர்க்க ரயில்வே பக்காவாக திட்டமிட்டு வருகிறது.
எந்த ரூட்
அதன்படி நாடு முழுக்க முதற்கட்டமாக 200 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு தொடக்கம் முதலே படிப்படியாக இதை அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிக தேவை மற்றும் அதிக பயணிகள் பயணிக்கும் ரூட்களை கண்டறிந்து அதில் வந்தே பாரத் ஸ்லீப்பரை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும், முக்கிய பொருளாதார மண்டலங்களை இணைக்கவும் இந்த ரயிலைப் பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications