50 வருஷமாவே ரயில்வே புறக்கணிக்கப்பட்டுவிட்டது.. நாங்கள்தான் வேகமாக வேலை பார்க்கிறோம்- மத்திய அமைச்சர்
டெல்லி: இந்திய ரயில்வே 50 வருடங்கள் புறக்கணிக்கப்பட்டது, தற்போது பூரண மறுசீரமைப்பில் உள்ளது என்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
கடந்த 11 வருடங்களில் சுமார் 35,000 கிலோமீட்டர் புது ரயில்வே வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது இந்திய ரயில்வே வரலாற்றில் இதுவரையிலும் இல்லாத பெரிய சாதனை.

60,000 கிமீ வழித்தடங்கள் மின்சாரம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளன. உலகளவில் கூட இப்போதுவரை யாரும் இவ்வளவு விரைவாக மின்சாரமயமாக்க முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
60,000 கிமீ வழித்தடங்கள் மின்சாரம் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளன. உலகளவில் கூட இப்போதுவரை யாரும் இவ்வளவு விரைவாக மின்சாரமயமாக்க முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1,300 ரயில்வே நிலையங்கள் மறுசீரமைப்பில் உள்ளன; அதில் 110 ஸ்டேஷன்கள் பணி முடிந்து திறக்கப்பட்டுள்ளன.
இனி, வருடம் முழுவதும் RPF பணியாளர் சேர்க்கை நடைபெறும். அதில் ஒவ்வொரு வருடமும் புதிய ஆட்சேர்ப்பு, படை மேலாண்மை முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Click it and Unblock the Notifications