"ரஷ்ய எண்ணெய் வேண்டாம்.." மொத்தமாக நிறுத்திய இந்தியா? டிரம்ப் தடை எதிரொலி! வெளியான தகவல்
டெல்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா கடந்த வாரம் இரு முக்கிய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால் வர்த்தகம் செய்வது சிக்கலானதாக மாறியுள்ளது. இதனால் ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுவனங்கள் நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடுமையான தடைகளை விதித்தன. இந்தத் தடைகள் ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிட்டது. இதற்கு முன்பும் கூட பல ரஷ்ய நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்த புதிய தடை சர்வதேச வர்த்தகத்தைச் சிக்கலானதாக மாற்றிவிட்டது.

இந்தியா முடிவு
இதையடுத்து இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. மேலும், பணம் செலுத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் எண்ணெய் சப்ளையர்களிடம் இருந்து தெளிவான விளக்கம் கிடைக்கும் வரை காத்திருக்கச் சுத்திகரிப்பு ஆலைகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிச்சயமற்ற நிலை காரணமாகச் சில சுத்திகரிப்பு ஆலைகள் தங்களது உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய ஸ்பாட் சந்தையை நாடி வருகின்றன. இதற்காக ஏற்கனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. அதேபோல நாட்டின் மிகப் பெரிய தனியார் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும், ஸ்பாட் கொள்முதலை அதிகரித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம் என்ன!
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான லுகோயில் மற்றும் ரோஸ்நேப்ட் ஆகிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த வாரம் புதிய தடைகளை விதித்தது. ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து இந்த நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், அந்த லிஸ்டில் அமெரிக்காவும் இணைந்தது. இந்த புதிய கட்டுப்பாடுகளே இந்திய நிறுவனங்களை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.
அதிகாரிகள் தகவல்
இது தொடர்பாக எண்ணெய் கொள்முதலில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், "தடை செய்யப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய பல சரக்கு கப்பல்களின் கொள்முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொருளாதாரத் தடை காரணமாக அந்த நிறுவனங்கள் அல்லது அதன் இணை நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனைகளைச் செய்யவும் வங்கிகள் மறுக்கிறது. இதனால் பணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படலாம் என நினைக்கிறோம். இதன் காரணமாகவே தெளிவு ஏற்படும் வரை கொள்முதலை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.
மற்றொரு சுத்திகரிப்பு துறை அதிகாரி இது தொடர்பாகக் கூறுகையில், "தடை செய்யப்படாத இடைத்தரகர்கள் மூலம் எண்ணெய் வாங்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான ஆப்ஷன்களை ஆராய்ந்து வருகிறோம். அரசு மற்றும் சப்ளையர்களிடமிருந்து தெளிவு கிடைக்கும் வரை, நாங்கள் புதிய ஆர்டர்களை வழங்க மாட்டோம்" என்று கூறினார்.
ரிலையன்ஸ் விளக்கம்
உக்ரைன் போர் தொடங்கிய பிறகு உலகின் பல நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை வாங்க மறுத்துவிட்டன. அப்போது முதலே இந்தியா தான் ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கி வருகிறது. கடந்த 2022 முதல் ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் மிகப் பெரிய இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கிறது.
சர்வதேச தடைகளுக்கு ஏற்ப நடவடிக்கையை மாற்றி அமைக்கும் அதேநேரம் தற்போதுள்ள சப்ளையர்கள் உடனான உறவைத் தொடர விரும்புவதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. தடை காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம், அதன் முக்கிய ரஷ்ய பார்ட்னரான ரோஸ்நேப்ட் நிறுவனத்திடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறையும் வர்த்தகம்
2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியா தினமும் சுமார் 1.9 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ததாக சர்வதேச எரிசக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.. இது ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதமாகும்.
இருப்பினும், விநியோகச் சிக்கல், தள்ளுபடி குறைவது உள்ளிட்டவை காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே ரஷ்ய இறக்குமதி தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 8.4% குறைந்தது. மறுபுறம் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவில் இருந்து வரும் கொள்முதல் அதிகரித்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications