பெண்களை மதிக்க மனுநீதி கற்றுத்தருகிறது.. இந்திய பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்.. டெல்லி பெண் நீதிபதி பேச்சு
டெல்லி: மனு நீதி போன்ற நூல்கள் இந்திய பெண்களுக்கு உயர்ந்த அதிகாரத்தை கொடுக்கின்றன, இந்திய கலாச்சாரம் மற்றும் பண்டைய நூல்கள் காரணமாக இந்திய பெண்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியை சேர்த்த Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) என்ற டிரேட் கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றில் நேற்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம் சிங் பேசினார். அறிவியல், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் போன்ற துறைகளில் பெண்கள் படும் கஷ்டங்கள் குறித்த தலைப்பில் நீதிபதி பிரதிபா பேசினார்.
இதில் மனு நீதியை குறிப்பிட்டு நீதிபதி பிரதிபா பல்வேறு விஷயங்களை தெரிவித்தார்.

இந்திய பெண்கள்
அவர் தனது பேச்சில், இந்தியாவில் பெண்களை மதிக்க வேண்டும். பெண்களை மதிக்காத ஆண்களுக்கு எந்த வேண்டுதல்களும் உதவாது மனு நீதி கூறி உள்ளது. இந்தியாவில் பிறந்த பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். மனு நீதி போன்ற நூல்கள் பெண்களுக்கு உயர்ந்த இடத்தை கொடுத்து உள்ளது. பெண்களை மதிக்கத்தவர்கள் எவ்வளவு பூஜைகளை செய்தாலும் பலன் அளிக்காது. பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று நமது வேதங்கள் கற்றுக்கொடுத்து உள்ளன.

மனு நீதி
பெண்களை மதிப்பதில்லை ஆசிய நாடுகள் சிறப்பாக விளங்குகின்றன. வீட்டிலும், வெளியே வேலை பார்க்கும் இடங்களிலும், சமுதாயத்திலும், பொதுவாகவும் பெண்களை ஆசிய நாடுகள் அதிகம் மதிக்கிறேன். முக்கியமாக இந்தியாவில் பெண்களை நாம் மதிக்க காரணம், நம்முடைய பின்புலங்கள் மற்றும் மத ரீதியான வரலாறுகள்தான் என்று நினைக்கிறேன். பெண்களை தலைமை பொறுப்பில் அமர்த்துவதில் இந்தியா மிகவும் முன்னேறிய நாடாக இருக்கிறது.

என்ன பேசினார்
இந்தியாவில் இருக்கும் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்ள கூடாது, கீழே இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டுகொள்ள கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் நடுத்தர வர்க்க பெண்களும், உயர்தர வர்க்க பெண்களும் முன்னேறி முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். இந்திய குடும்ப அமைப்பு என்பது ஒற்றுமையை வலியுறுத்தும் கொள்கை கொண்டது.

கூட்டு குடும்பம்
கூட்டு குடும்ப வாழ்க்கையை பறைசாற்றுகிறது இந்திய கலாச்சாரம். இதனால் கூட்டு குடும்ப வாழ்க்கை தொடர் வேண்டும். கூட்டு குடும்பங்களில் இருக்கும் ஆண்கள் பெண்களை அதிகம் மதிக்கிறார்கள். நாம் வேலைகளை பிரித்து செய்வோம். மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து வாழ்வார்கள். தனியாக இருக்கும் குடும்பங்களை விட கூட்டு குடும்பங்கள் இன்னும் சிறப்பானது. முக்கியமாக வெளியே வேலை பார்க்கும் பெண்கள் டென்சன் இல்லாமல் இருக்க கூட்டு குடும்பமே சிறந்தது, என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதிபா எம் சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications