தொடங்கியது வர்த்தக போர்.. இந்தியாவிற்கு அடி.. ஏற்றுமதி 2.38 சதவீதம் கிடுகிடு சரிவு
டெல்லி: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று செயல்பட்டு வருகிறார். இவர் பல்வேறு நாடுகளுக்கு வரிகளை விதித்து வருகிறார். இதனால் உலகில் வர்த்தக போர் ஏற்படும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு, சரிவை சந்தித்துள்ள திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு நாடுகளும் தங்களின் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது அந்த நாட்டின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்போது அந்த நாட்டின் உற்பத்தி சார் தொழில் சிறப்பாக இருப்பதையும், அந்த நாட்டின் பொருட்கள் தரமாக இருப்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
அதோடு நாட்டில் உற்பத்தி சார் தொழிலில் உள்ளவர்களுக்கும் அதிக லாபம் என்பது கிடைக்கும். அந்த வகையில் நம் நாட்டில் இருந்தும் உணவு பொருட்கள், மருந்துகள், ஆடைகள் உள்பட அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் தான் தற்போது ஒரு திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு என்பது சரிவை சந்தித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நம் நாட்டில் இருந்து வர்த்தக ரீதியாக கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளுக்கு 36.43 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு (2024)ஜனவரி மாதம் நடந்த ஏற்றுமதியை ஒப்பிடும்போது 2.38 சதவீதம் குறைவாகும். ஏனென்றால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 37.32 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
அதேபோல் கடந்த ஜனவரி மாதம் வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு 59.42 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதேவேளையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 53.88 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதன்மூலம் கடந்த ஜனவரி மாதத்தை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போதும் நம் நாடு வெளிநாடுகளில் இருந்து 10.8 சதவீதம் வரை அதிக இறக்குமதியை செய்துள்ளது.
இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் நம் நாட்டுக்கான வர்த்தக பற்றாக்குறை (இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையே உள்ள வித்தியாசம்) என்பது 22.99 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. 2024-25ம் நிதி ஆண்டை எடுத்து கொண்டால் 2024 ஏப்ரல் மாதம் முதல் 2025 ஜனவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இந்திய வர்த்தகத்தில் ஏற்றுமதி என்பது 358.91 பில்லியன் டாலர் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது 1.39 சதவீதம் அதிகமாகும். அதேவேளையில் இறக்குமதி என்பது 601.9 பில்லியன் அமெரிக்கா டாலராக உள்ளது. இது 7.43 சதவீதம் அதிகமாகும்'' என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்பால் மொத்த உலக நாடுகளும் நடுங்கி வருகின்றன. இதற்கு காரணம் டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு வர்த்தக ரீதியாக வரி விதித்து வருவது தான். மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்தார். பதிலுக்கு சீனாவும் அமெரிக்காவுக்கு வரிகளை விதிக்க தொடங்கி உள்ளது.
அதேபோல் அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நம் நாடு வரி விதிப்பது போல் அமெரிக்காவும் நமக்கு வரி விதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications