விரைவில் வரும் புல்லட் ரயில்! முதற்கட்ட பணி முடிவது எப்போது? அஸ்வினி வைஷ்ணவ் தந்த மேஜர் அப்டேட்
டெல்லி: இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் குஜராத் பிலிமோரா மற்றும் சூரத் இடையே 50 கிலோமீட்டர் தூர பணிகள் எப்போது முடிவடையும்? என்பது பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ரயில்வே துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக புல்லட் ரயில் திட்டத்தை இந்தியா வகுத்து அதற்கான பணியை தொடங்கி உள்ளது. இந்த புல்லட் ரயில் சேவை என்பது மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே இயங்க உள்ளது.

இந்த திட்டம் ரூ.1.08 லட்சம் கோடி திட்டத்தில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதில் ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும் நிலையில் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் தலா ரூ.5 ஆயிரம் கோடியை வழங்க உள்ளன. மீதமுள்ள நிதியானது ஜப்பான் நாட்டில் இருந்து கடனாக பெறப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கமதாபாத்-மும்பை இடையே 350 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புல்லட் ரயில் இயங்கும். இதன்மூலம் 508 கிலோமீட்டர் தொலைவை வெறும் 2 மணிநேரம் 50 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது 8 மணிநேரமாக பயண நேரம் இருக்கும் நிலையில் 5 மணிநேரம் குறையும். இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு என்று தனியாக ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டு வருகிறது. வல்சாத் மாவட்டத்தின் பர் மற்றும் அவுரங்கா மற்றும் நவ்சாரியில் உள்ள பூர்ணா, மின்தோலோ, அம்பிகா, வெங்கனியா உள்ளிட்ட 6 நதிகளின் மேல் பாலங்கள் அமைக்கப்பட்டு புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த பாலங்களின் ட்ரோன் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.
கடந்த 2017 ல் பணிகள் துவங்கினாலும் கூட நிலம் கையகப்படுத்துவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன. மேலும் கொரனோா பரவலும் பணியை முடக்கியது. இதனால் 2022ல் புல்லட் ரயில் சேவையை தொடங்க எடுத்த முன்முயற்சிகள் தள்ளிப்போயின. இருப்பினும் கடந்த 2021 நவம்பர் மாதம் புல்லட் ரயில் வழித்தட பணிகள் மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் முதற்கட்ட வழித்தட பணி எப்போது முடிவையும் என்பது பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே துறையின் சேவைகள் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களையும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பிரிவு என்பது குஜராத்தின் பிலிமோரா மற்றும் சூரத் இடையே 50 கிமீ தூரத்தில் நடந்து வருகிறது. இந்த பணி 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும். தற்போது புல்லட் ரயில் திட்டத்துக்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது'' என்றார். சமீபகாலமாக புல்லட் ரயில் குறித்த முக்கிய அப்டேட்டுகள் வெளிவராமல் இருந்த நிலையில் அஸ்வினி வைஷ்ணவ் இந்த புதிய தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு முன்பு புதிய ரயில்களின் எண்ணிக்கை என்பது மெயில், எக்ஸ்பிரஸ் வகைகளை பொறுத்தமட்டில் 1,786 என இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை என்பது 2,124 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர் சேவைகளுக்கான புதிய ரயில்கள் 5,626 என இருந்தது. தற்போது இது 5,774 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை 2,792ல் இருந்து 2,856 ஆக அதிகரித்துள்ளது. அதோடு கடந்த 2022-23ம் ஆண்டில் ரயிலில் 640 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது 2023-24ம் ஆண்டில் 750 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications