‘ஆபரேஷன் சிந்தூர்’ இந்தாங்க ஆதாரம்.. பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா! வீடியோக்களை வெளியிட்ட ராணுவம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அதனை மறுத்த நிலையில், தாக்குதல் தொடர்பான வீடியோக்களையும், தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களையும் இந்திய முப்படை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக, ஆயுதங்களுடன் தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன.

India army pakistan

மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன. பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது.

ஆனால் அதனை பாக் ராணுவம் மறுத்த நிலையில், ஆனால் பாகிஸ்தான் அதனை மறுத்த நிலையில், தாக்குதல் தொடர்பான வீடியோக்களையும், தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களையும் இந்திய முப்படை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் இன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் ராஜீவ் கய், ஏர் மார்ஷல் பாரதி உள்ளிட்ட முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் ராஜீவ் கய், "முழுக்க முழுக்க பயங்கரவாத அமைப்புகளின் தலைமையகத்தை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இது தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஏற்கனவே இந்தியாவில் நடத்தப்பட்ட புல்வாமா, கந்தகார் விமான கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய விமானப்படையின் ஏர்மார்ஷல் பாரதி," மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஏராளமான ராணுவ வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா சார்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு விமான தளத்திலும் நடந்த தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதங்களை விமானப்படை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சர்கோலா, ரஹீம் யார்கான், நூர்கான் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நமது தாக்குதல் பயங்கரவாதிகள் மீது மட்டும் தான். ராணுவத்தின் மீது அல்ல என குறிப்பிட்டார்.

மேலும் தாக்குதலுக்கு ஆதாரமாக வீடியோக்களையும், தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் இருந்த செயற்கைக்கோள் புகைப்படங்களையும் ராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+