இஸ்ரேலை நம்பாத இந்தியா! ஆயுத கொள்முதலில்.. ரஷ்யாவுடன் சைலண்டாக டீல் முடிந்தது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கில் இஸ்ரேல் செய்து வரும் அட்டூழியங்களுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இப்படி இருக்கையில், ஆயுத கொள்முதல் விஷயத்தில், இஸ்ரேலை நம்பாமல், ரஷ்யாவுடன் இந்தியா மிகப்பெரிய டீலை முடித்திருக்கிறது.

பாலஸ்தீனத்தில் தொடங்கி, தற்போது ஈரான் வரை வந்து நின்றிருக்கிறது இஸ்ரேல். சும்மா கிடந்த மத்திய கிழக்கை மொத்தமாக பற்றி எரிய வைத்திருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேலை நம்பாமல் ரஷ்யாவிடம் இந்தியா ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது, சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

India s Silent Move

இந்திய கடற்படையை நவீனப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கடற்படைக்கு தேவையான ஆயுதங்களை வாங்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு இரண்டு ஆப்ஷன்கள் உண்டு.

1. இஸ்ரேலின் MR-SAM
2. ரஷ்யாவின் Shtil-1

ரஷ்யாவுடன் டீலிங்

இந்த இரண்டும் மிக முக்கியமான ஏவுகணைகள். ஒவ்வொன்றும் வித்தியாசமானது. உதாரணத்திற்கு இஸ்ரேலின் MR-SAM, கப்பலிலிருந்து புறப்பட்டு 70 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும். ஆனால், ரஷ்யாவின் Shtil-1 ஏவுகணை, 50 கி.மீ தொலைவில் உள்ள இலக்கைதான் தாக்கும். இந்நிலையில் இந்தியா, ரஷ்யாவின் ஏவுகணைகளை வாங்க ரூ. 2,182 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்தியாவிடம் ஏற்கெனவே இஸ்ரேலின் ஏவுகணைகள் இருந்தாலும், மீண்டும் அதை வாங்காமல், ரஷ்யாவுடன் இந்தியா டீலை முடித்திருப்பது சர்வதேச அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

இதற்கு காரணம் இந்தியா இன்னமும் ரஷ்யாவை பெரிய அளவுக்கு நம்புகிறது என்பதுதான். இது தவிர விலைக்குறைவு மற்றொரு காரணமாகும். அதேபோல, இந்தியாவில் உள்ள போர்க்கப்பல்கள் ரஷ்யன் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டவை. எனவே, அவற்றிற்கு ரஷ்ய ஏவுகணைகள்தான் கச்சிதமாக பொருந்தும்.

விலை என்ன?

விலையை ஒப்பிட்டு பார்த்தால், ரஷ்ய ஏவுகணை கப்பலுக்கு 360 டிகிரி பாதுகாப்பை கொடுக்கும். வெறும் 5 மீட்டர் உயரத்தில் வரும் ஏவுகணைகள் தொடங்கி, 15 கி.மீ உயரத்தில் பறக்கும் போர் விமானங்கள் வரை இந்த ஏவுகணைகள் தாக்கி அழிக்கும். விலையும் ரொம்ப கம்மி. ஒரு ஏவுகணை ரூ.6 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இஸ்ரேலின் MR-SAM ரூ.10-20 வரை விற்பனை செய்யப்படுகிறது. அப்படியே டபுள் ரேட்.

டெக்னாலஜியில் எது சிறந்தது?

இரண்டும் வெவ்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. இருப்பினும் ரஷ்ய ஏவுகணைகள் கொஞ்சம் நம்பிக்கைத்தன்மையை கொண்டிருக்கின்றன. MR-SAM ஏவுகணைகளில் ரேடார் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், Shtil-1 ஏவுகணைகள் கப்பலின் ரேடாரை நம்பிதான் இருக்கின்றன. எனவே, இதனை ஜாம் செய்ய முடியாது. இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்துவிடும். MR-SAM-ல் ரேடார் இருப்பதால் இதை ஜாம் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை ரொம்ப முக்கியம்

இந்தியாவுக்கும்-ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு நீண்ட காலமானது. ரஷ்யா நம்மை ஏமாற்றாது என்பதற்கு 100க்கு 150% கேரண்டி கொடுக்க முடியும். ஆனால், இஸ்ரேலை இப்படி முழுமையாக நம்பிவிட முடியாது. இஸ்ரேலும், அமெரிக்காவும் நெருக்கிய நண்பர்கள் என்பதால், இஸ்ரேலிடம் உஷாராக இருக்க வேண்டியது மிக முக்கியம். சமீபத்தில் இந்திய பெருங்கடலில், கன்னியாகுமரியிலிருந்து வெறும் 350 கி.மீ தொலைவில், ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா வீழ்த்தியிருந்தது.

இது இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட துரோகம். ஈரான் போர்க்கப்பல் நம்முடைய அழைப்பின் பேரில்தான் இங்கு வந்தது. இப்படி துரோகம் செய்யும் அமெரிக்காவுடன் கூட்டணியில் இருக்கும் இஸ்ரேலை எடுத்தவுடன் நம்பிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+