‛க்யூட்’.. பிரக்ஞானந்தாவை பார்த்ததும் விமான பணிப்பெண் கொடுத்த ரியாக்சன்! ஹைலைட்டே இதுதான்! செம
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை பார்த்தவுடன் விமான பணிப்பெண் கொடுத்த கிப்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதுதொடர்பான போட்டோ தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சென்னையை சேர்ந்தவர் பிரக்ஞானந்தா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றார். அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் கடந்த வாரம் உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறினார்.இறுதி போட்டியில் நார்வே நாட்டை சேர்ந்த உலக செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்செனை, பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் துரதிர்ஷ்டவசமாக பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். இதையடுத்து 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. இவரது இந்த வெற்றியை இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினர். மேலும் பிரக்ஞானந்தாவின் தோல்வியில் துவண்டு விடக்கூடாது. தொடர்ந்து முயன்றால் உலக சாம்பியன் பட்டத்தை எளிதில் எட்டலாம் என அவருக்கு ஊக்கமும் கொடுத்தனர்.
இந்நிலையில் தான் கடந்த 31ம் தேதி பிரக்ஞானந்தா தனது தந்தை ரமேஷ் பாபு, தாய் நாகலட்சுமியுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து வெற்றார். அதன்பிறகு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக அவர் இண்டிகோ விமானத்தில் பயணித்தார்.
அப்போது அங்கிருந்த விமான பணிப்பெண், பிரக்ஞானந்தாவை அடையாளம் கண்டார். இதையடுத்து அவர் பிரக்ஞானந்தாவை பாராட்டி தெரிவித்தார். மேலும் விமான பணிப்பெண்கள் தங்களின் கைப்பட எழுதி பிரக்ஞானந்தாவின் சாதனையை பாராட்டினர். இதுதொடர்பாக அவர்கள் வாழ்த்து கடிதம் ஒன்றை வழங்கினர். அதனை பிரக்ஞானந்தா மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது: ‛‛அன்புள்ள பிரக்ஞானந்தா.. நீங்கள் எங்கள் விமானத்தில் பயணிப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் நீங்க நம் நாட்டின் பெருமை. நீங்கள் நம் நாட்டை உலக அரங்கில் பெருமைப்படுத்தி உள்ளீர்கள். இதுபோல் இன்னும் பல சாதனைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும். இதற்காக வாழ்த்துவதோடு, உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் நபராக இருக்கிறீர்கள். உங்களின் விளையாட்டை தொடர்ந்து மேம்படுத்தி வெற்றி வசமாக உத்வேகத்துடன் செயல்படுங்கள்'' என எழுதப்பட்டு இருந்தது. இந்த வாழ்த்து செய்தியில் விமான கேப்டன்கள், விமான பணியாளர்கள் என அனைவரும் கையெழுத்திட்டு இருந்தனர். அதோடு விமான பணிப்பெண்கள் பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாய் நாகலட்சுமியுடன் போட்டோ எடுத்து கொண்டனர். இந்த போட்டோ தற்போது வெளியாகி உள்ளது.
முன்னதாக வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி உள்ள பிரக்ஞானந்தாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தனது வெள்ளி பதக்கத்தை முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும் பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சத்தை பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications