ராகுல் காந்தி மட்டுமல்ல.. இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை! தகுதி நீக்கம் செய்யப்பட்ட "டாப் தலைகள்"
டெல்லி: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் எம்பி பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. இந்திரா காந்தி, ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டவர்கள் கூட ராகுல் காந்தியை போல் இதற்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்தது.
லோக்சபா எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முக்கிய தலைவர்கள் யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.

இந்திரா காந்தி:
கடந்த 1971-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் இந்திரா காந்திக்கு முகவராக செயல்பட்ட யஷ்பால் கபூர் அரசு ஊழியர் ஆவார். எனவே அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி இந்திரா காந்தியிடம் தோல்வியடைந்த ராஜ் நாராயண் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கடந்த 1975 ஜூன் 12-ம் தேதி இந்திரா காந்தி குற்றவாளி, அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா:
மேலும் அடுத்த 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தது. அதன்பிறகு நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அரசியல் அமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வராக பதவி வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார்.

லாலுபிரசாத் யாதவ்:
மாட்டுத்தீவின ஊழல் வழக்கில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு தேர்தலில் போட்டியிட 11 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் சிறை தண்டனை அதன் பிறகு 6 ஆண்டுகள் போட்டியிட தடை என மொத்தம் 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

ஆசம் கான்:
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆசம்கான், கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடி, ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆசம் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ பொறுப்பில் இருந்து ஆசம் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

உம்லேஷ் யாதவ்:
தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி உம்லேஷ் யாதவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் செலவீனங்களை குறைத்துக் காட்டியதற்காக உம்லேஷ் யாதவை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம் அவர் தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்தது. உம்லேஷ் யாதவ் உத்தர பிரதேசத்தின் பிசவுலி தொகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

லட்சத்தீவு எம்.பி முகம்மது பைசல்:
கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். எனினும், தீர்ப்பை எதிர்த்து முகமது பைசல் மேல்முறையீடு செய்ததை அடுத்து தண்டனையை நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. முகமது பைசலின் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் லட்சத்தீவு இடைத்தேர்தலை ஆணையம் நிறுத்திவைத்துள்ளது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"ஜோசியக்காரர் சொன்னாரே" விஜயின் கயிறும் ராகுலின் கேக்கும்! விடியல் பயணம் மட்டும் இல்லேனா? லியோனி நச் -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications